News May 1, 2024

‘தல’ என்ற வார்த்தைக்கு இலக்கணம் அஜித்

image

அஜித் பிறந்தநாளையொட்டி, அவர் நடித்த ‘தீனா’ படம் இன்று ரீரிலீஸாகிறது. இந்நிலையில், தனது மனதுக்கு மிகவும் நெருக்கமான இப்படம் ரீரிலிஸ் ஆவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘தல’ என்ற வார்த்தைக்கு இலக்கணமான அஜித் சாருக்கு நன்றி என்றும், இப்படத்தை மீண்டும் திரையரங்குகளில் கொண்டாடுவோம் எனவும் கூறியுள்ளார்.

Similar News

News February 4, 2026

சிக்கன் பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. விலை குறைந்தது

image

சண்டே வரை வெயிட் பண்ண வேண்டாம், இன்னைக்கே சிக்கன் எடுத்துற வேண்டியதுதான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்குத்தான் இந்த ஹேப்பி நியூஸ். இன்று கறிக்கோழி 1 கிலோ ₹120-லிருந்து ₹5 குறைந்து ₹115 ஆக விற்பனையாகிறது. அதேநேரம், முட்டைக்கோழி விலை ₹72 ஆகவே நீடித்து வருகிறது. முட்டை கொள்முதல் விலையும் ₹5.25 ஆக உள்ளதால், சிக்கன் பிரியர்கள் இன்று ஹேப்பியாக வாங்கி சாப்பிடுங்கள்.

News February 4, 2026

ஷாருக், சல்மான் போல் ஆவேன்: லெஜண்ட் சரவணன்

image

தான் ஒருநாள் ஷாருக்கான், சல்மான் கான் போல ஆவேன் என்று சிறுவயதிலேயே தனது தாயிடம் கூறியதாக லெஜண்ட் சரவணன் பேசியுள்ளார். தன்னுடைய ‘லீடர்’ பட விழாவில் பேசிய அவர், சிறுவயதிலிருந்தே சினிமா மீது எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு, ஆனால் சில காரணங்களால் எனது தந்தையின் தொழிலைக் கவனிக்க வேண்டியதாகிவிட்டது. மேலும், ஜவுளி, சினிமா எதுவானாலும் 100% உழைப்பை கொடுப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

News February 4, 2026

BREAKING: அரசு அறிவித்தது.. தமிழக மக்களுக்கு அதிர்ச்சி

image

TN-ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முதல் முறையாக ஒரு லட்சத்தை கடந்துள்ளது. சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 2012-ல் 53,022 ஆக இருந்த பாதிப்பு, கடந்தாண்டில் அது இரு மடங்காக(1,00,097) அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 8,505, காஞ்சியில் 7,295, வேலூரில் 6,525 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் அதிகளவில் மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!