News December 28, 2024

களத்தில் இறங்கி கருத்து கேட்ட ஆளுநர்

image

சென்னை அண்ணா யுனிவர்சிட்டியில் ஆளுநர் RN.ரவி நேரில் ஆய்வு மேற்கொண்டார். மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை அடுத்து, பாதுகாப்பு தொடர்பாக ஆளுநர் ஆய்வு செய்தார். அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்திடம் விளக்கங்களை பெற்ற அவர், மாணவர்களிடமும் கருத்துக்களைக் கேட்டறிந்தார்.

Similar News

News September 12, 2025

Asia Cup: பாதியில் விலகிய இந்திய ஆல்ரவுண்டர்!

image

ஆசிய கோப்பைக்கான இந்திய அணியின், ரிசர்வ் பட்டியலில் இடம் பெற்றிருந்த வாஷிங்டன் சுந்தர், தொடரில் இருந்து விலகியுள்ளார். அவர் இங்கிலாந்தின் கவுண்டி அணியான ஹேம்ஷேர் அணிக்காக விளையாடவுள்ளதால், தொடரில் இருந்து விலகியுள்ளார். சமீபத்தில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், 4 போட்டிகளிலும் ஒரு சதம் உள்பட 284 ரன்கள் குவித்து, 7 விக்கெட்களையும் சுந்தர் கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News September 12, 2025

டெல்லியை புறக்கணிக்கிறாரா அண்ணாமலை?

image

துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் அண்ணாமலை பங்கேற்காதது பேசுபொருளாகியுள்ளது. முன்னதாக, டெல்லியில் அமித்ஷா தலைமையில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்திற்கும் அண்ணாமலை செல்லவில்லை. அதிகமான திருமண நிகழ்வுகள், வேலைகள் இருந்ததால் போகவில்லை என விளக்கமும் கொடுத்திருந்தார். இது உள்கட்சி உரசலாக இருக்கக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். உங்க கருத்தை கமெண்ட் பண்ணுங்க.

News September 12, 2025

பெண்களின் ஹார்மோன்.. இதை கட்டாயம் பாருங்க

image

பெண்களின் ஹார்மோன் சமநிலை, உடல், மன நலனுக்கு மிகவும் அவசியம். இதில் ஏதேனும் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டால் மாதவிடாய் சுழற்சி, மனநிலை, தூக்கம், சருமம், முடி, உடல் எடையில் மாற்றங்கள் ஏற்படலாம். *ஹார்மோன் சமநிலையை பராமரிப்பதில் தூக்கத்தின் தரம் முக்கியமானது. *மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் ஹார்மோன் சமநிலையை மேம்படுத்தலாம். *செர்ரிகள், ஆளி விதைகளை தினசரி உணவில் சேர்த்து கொள்ளுங்கள். டேக் கேர் Sisters..

error: Content is protected !!