News October 23, 2024
X தளத்தை மண்டையில் கொட்டிய அரசு

கடந்த சில நாள்களாக விமானங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் வரும் விவகாரத்தில், X தளத்தை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடுமையாக சாடியுள்ளது. X மற்றும் மெட்டா நிறுவனங்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், X தளம் குற்றச் செயல்களை செய்ய தூண்டுவதாக மத்திய அமைச்சகம் சாடியுள்ளது. VPN பயன்படுத்தி மிரட்டல் விடுத்த பயனர்களின் விவரங்களைப் பெற முடியாததால் இவ்வாறு சாடியுள்ளது.
Similar News
News December 12, 2025
வெற்றி பெற வித்தை செய்யணும்: அண்ணாமலை

2026 தேர்தலில் 3-வது அணி வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார். தமிழகத்தில் பாஜக மேலும் வளர்ச்சி பெற இன்னும் பல வித்தைகளை செய்ய வேண்டும் என்றார். ஒவ்வொரு கட்சியும் தங்களின் இடத்தை தக்க வைக்கவும், முன்னேறவுமே முயற்சிப்பார்கள் என்றார். அமித்ஷா உள்ளிட்டோருடன் மூடிய அறையில் பேசியதை வெளியில் கூற முடியாது என்றும் தெரிவித்தார்.
News December 12, 2025
மக்கள் நாயகன் காலமானார்.. கண்ணீருடன் இரங்கல்

கிளிகளுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த <<18542461>>’பறவை மனிதர்’<<>> ஜோசப் சேகரின் மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த இந்த மாமனிதரின் இறுதிக்காலம் மகிழ்ச்சியாக அமையவில்லை. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஜோசப் சேகர், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார். அவரது இழப்புக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP
News December 12, 2025
ரஜினிக்கு 50 ஆண்டு விழா எடுக்காதது ஏன்?

கேட்டை திறந்து ரஜினி சினிமாவிற்குள் நுழைந்து 50 ஆண்டுகள் நிறைவு செய்துவிட்டார். உச்சத்திலேயே பறக்கும் அவரை கெளரவிக்கும் விதமாக, ஏன் தமிழ் திரையுலகம் இன்னும் ஒரு விழா கூட எடுக்கவில்லை என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். ரஜினியே வேண்டாம் எனக் கூறிவிட்டாரா அல்லது அதற்காக முயற்சி எடுக்கவில்லையா எனத் தெரியவில்லை. உலக அரங்கில் தமிழ் சினிமாவை அழைத்து சென்றவர்களில் ஒருவரான அவரை கொண்டாட வேண்டாமா?


