News May 15, 2024
இனியும் அரசு உறங்கக் கூடாது

ஆன்லைன் சூதாட்டத்தால் கடந்த 6 மாதங்களில் 8 உயிர்பலிகள் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிட்டிருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ், இதனை கண்டுகொள்ளாமல் அரசு தூங்கி வருவதாக சாடியுள்ளார். அவருடைய அறிக்கையில், “அரசின் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், ஆன்லைன் சூதாட்ட மோகம் எப்போது ஒழியுமோ? என்று ஏங்கித் தவிப்பதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News November 20, 2025
ரஷ்யா – பிரிட்டன் இடையே மோதலா?

பிரிட்டனின் கடல் எல்லைக்குள் நுழைந்த ரஷ்யாவின் கப்பலான ‘Yantar’, கண்காணிப்பு விமானிகள் மீது லேசர் கதிர்களை பாய்ச்சியதாக கூறப்படுகிறது. ரஷ்யா இதை ஆராய்ச்சி கப்பல் என்று கூறினாலும், பிரிட்டன் ரஷ்யாவின் உளவு கப்பல் என குற்றஞ்சாட்டியுள்ளது. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது தெரியும் என கூறிய பிரிட்டன் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இதன் மூலம் இருநாடுகள் இடையே மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
News November 20, 2025
கவர்னரின் அடாவடி: CM ஸ்டாலின்

கோவை, மதுரை மெட்ரோ திட்டத்துக்கு மறுப்பு தெரிவித்ததாக, மத்திய அரசை கண்டித்து INDIA கூட்டணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில், SIR மூலம் வாக்குரிமையை பறித்தும், Delimitation மூலம் தமிழ்நாட்டின் தொகுதிகளை குறைத்தும், மக்களாட்சி மாண்பை மதிக்காத கவர்னரின் அடாவடி என அனைத்துக்கு எதிராகவும் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
News November 20, 2025
மசோதா ஒப்புதலுக்கு காலக்கெடு விதிக்க முடியாது: SC

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஜனாதிபதி, கவர்னருக்கு குறிப்பிட்ட காலக்கெடு விதிக்க முடியாது என SC அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. TN அரசின் வழக்கில் 2 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த அத்தகைய உத்தரவு அரசமைப்புக்கு எதிரானது எனவும், மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் இருக்கும்போது மட்டுமே நீதித்துறை மறு ஆய்வு செய்ய முடியும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.


