News March 18, 2024
‘குட் நைட்’ பட நடிகைக்கு திருமணம் முடிந்தது

‘குட் நைட்’ படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை மீதா ரகுநாத்துக்கு, பெற்றோர் முன்னிலையில் திருமணம் முடிந்தது. தனது நீண்ட நாள் நண்பரை காதலித்து வந்த இவருக்கு, கடந்தாண்டு நவம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில், நேற்று இரு வீட்டார் முன்னிலையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அவருக்கு, ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News July 6, 2025
வீண் செலவு செய்கிறதா மின்வாரியம்?

தமிழகத்தில் 3.04 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த டெண்டர் கோரியுள்ள நிலையில், மின் வாரியம் 11.50 லட்சம் சாதாரண மீட்டர்கள் வாங்க ₹160 கோடி செலவில் பணி ஆணைகளை வழங்கியுள்ளது. ஏற்கனவே ஸ்மார்ட் மீட்டர் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த சாதாரண மீட்டர்கள் வீணாகலாம் என்றும், இது தேவையற்ற செலவு என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
News July 6, 2025
தமிழர் வரலாற்றை விரும்பாத திராவிடர்கள்: சீமான்

தமிழர்கள் எப்போதும், பழம்பெருமை பேசுவார்களே என திராவிடர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஏனெனில் தமிழர் வரலாற்று பெருமை பேசுவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள் என்று சீமான் விமர்சித்துள்ளார். வரலாறு என்பது ஒட்டுமொத்த தமிழ் தேசியத்தின் வழித்தடம். தமிழரின் அடையாளங்களை மறைத்தால்தான் திராவிடத்தால் அரசியல் செய்ய முடியும் என்று திட்டமிட்டு பரப்புரை செய்து வருகின்றனர் என்று கடுமையாக சாடினார்.
News July 6, 2025
ஆண்களை பாதிக்கும் லேப்டாப், பைக்: டாக்டர் கூறும் அட்வைஸ்

ஆண்கள் நீண்ட நேரம் மடியில் வைத்து மடிக்கணினி(Laptop) பயன்படுத்துவது விந்து பைகளை பாதிக்கும் என பாலியல் சிகிச்சை நிபுணர் காமராஜ் எச்சரித்துள்ளார். மேலும், இருசக்கர வாகனங்களை 1 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து ஓட்டக் கூடாது எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அனைவரும் உணவு, உணர்வு, உடற்பயிற்சி, உறக்கம், உடலுறவு ஆகியவற்றில் சீரான கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். PLEASE TAKE CARE BOSS..!