News March 25, 2025
ட்ரம்ப் Ex மருமகளுடன் காதலில் விழுந்த கோல்ஃப் வீரர்

அமெரிக்காவின் பிரபல கோல்ஃப் வீரரான டைகர் வுட்ஸ்(50), அவரது காதலியை உலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் முன்னாள் மருமகளான வனெஸ்ஸாதான் அது. Life is better with you by my side! எனக் குறிப்பிட்டு ஜோடியாக இருக்கும் படத்தை டைகர் வுட்ஸ் வெளியிட்டுள்ளார். டிரம்ப் ஜுனியர் – வனெஸ்ஸா(47) ஜோடி 2018-ல் விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 6, 2025
தேர்தல் கூட்டணி.. அறிவித்தார் செங்கோட்டையன்

பாஜக தன்னை தவெகவுக்கு அனுப்பியதாக சொல்வது வேடிக்கையாக இருக்கிறது என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஒரு கட்சியின் தலைவருடைய கொள்கைதான் அனைத்துத் தொண்டனுக்கும். அது தனக்கும் பொருந்தும் எனக் கூறிய அவர், அதிமுக – தவெக கூட்டணிக்கு 100% வாய்ப்பே இல்லை என உறுதிபட அறிவித்தார். மேலும், மாபெரும் மக்கள் சக்தியுடன் தவெக தலைவர் விஜய் ஆட்சிக் கட்டிலில் அமர்வார் என்றும் தெரிவித்துள்ளார்.
News December 6, 2025
புதிய கொடியை அறிமுகம் செய்தார் வைகோ

போதைப் பொருள் ஒழிப்பு, சாதி, மத மோதல்கள் தடுப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி வைகோ ‘சமத்துவ நடைபயணம்’ மேற்கொள்கிறார். இந்நிலையில், ஜன.2-ல் திருச்சியில் தொடங்கும் இப்பயணத்துக்கான கொடியை CM ஸ்டாலின், வைகோவிடம் கொடுத்து பயணத்தை தொடங்கி வைக்கிறார். இப்பயணம் ஜன.12-ல் மதுரையில் நிறைவடைகிறது. இதில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தன்னுடன் பங்கேற்பார்கள் என்றும் வைகோ கூறியுள்ளார்.
News December 6, 2025
கோவில்பட்டியில் அரசன் பட பூஜை?

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள ‘அரசன்’ படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், டிச.8-ல் கோவில்பட்டியில் பட பூஜை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, பிரமாண்டமான முறையில் வடசென்னை செட் போடப்பட்டுள்ளதாம். மேலும், இப்படத்தில் விஜய் சேதுபதியும் இணைந்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. வெற்றிமாறன் – சிம்பு காம்போ வெற்றி பெறுமா?


