News April 25, 2025
தேசப்பிதா மகாத்மா காந்தியின் பொன்மொழிகள்..!

▶ உண்மையான போருக்கு எதிரான ஒரு போரை தொடங்க வேண்டுமென்றால், அதனை குழந்தைகளிடம் இருந்துதான் தொடங்க வேண்டும். ▶ வன்முறையை விரும்பும் மனிதர்கள் பிற வன்முறையாளர்களால் கொல்லப்படுவதில்லை. அவர்களின் கொள்கையால்தான் கொல்லப்படுகிறார்கள். ▶ அரசியலுக்கும் மதத்துக்கும் சம்பந்தமில்லை என்றும் தெரிவிப்பவர்களுக்கு மதம் பற்றி ஒன்றும் தெரியாது.
Similar News
News January 7, 2026
சற்றுநேரத்தில் சந்திப்பு.. இணைகிறாரா ஓபிஎஸ்?

பாமகவுடன் ( அன்புமணி) கூட்டணியை உறுதி செய்த கையோடு, EPS டெல்லி சென்றுள்ளார். இன்னும் சற்றுநேரத்தில் அமித்ஷாவை சந்திக்கும் EPS, கூட்டணியில் இணையும் கட்சிகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். குறிப்பாக, TTV, OPS-ஐ கூட்டணிக்குள் கொண்டு வருவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படுகிறதாம். மேலும், பாஜகவுக்கு கூடுதலாக தொகுதிகள் ஒதுக்கி, அதில் OPS, அவரின் ஆதரவாளர்களை களமிறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.
News January 7, 2026
களமாடுவதற்கு ஸ்ரேயஸ் ஐயர் ரெடி!

மண்ணீரல் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள ஸ்ரேயஸ் ஐயர் முழு உடற்தகுதியை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. நியூசிலாந்து ODI தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயஸ் துணை கேப்டனாக இடம்பெற்றிருந்தாலும், Centre of Excellence-ல் அவர் உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் என BCCI தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஸ்ரேயஸ் ஐயர் கிரிக்கெட் களம் திரும்புவதற்கு தயார் என NCA தலைவர் லக்ஷ்மன் BCCI-க்கு மெயில் அனுப்பியுள்ளார்.
News January 7, 2026
தி.குன்றம் வழக்கு: SC-யில் கேவியட் மனு!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில், இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளார். திருப்பரங்குன்றம் வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் தனது தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என ராம ரவிக்குமார் மனுத்தாக்கல் செய்துள்ளார்.


