News April 12, 2025
திமுகவை வீட்டுக்கு அனுப்புவதே இலக்கு: அண்ணாமலை

2026 தேர்தலில் திமுகவை துடைத்தெறிந்து வீட்டுக்கு அனுப்புவதே இலக்கு என அண்ணாமலை தெரிவித்துள்ளார். புதிய பாஜக மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் நிகழ்ச்சியில் பேசிய அவர், தேர்தல் வெற்றிக்கு பாஜகவை நயினார் நாகேந்திரன் வழி நடத்துவார் என குறிப்பிட்டார். அமித்ஷா வருகையால் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவடைந்து உள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.
Similar News
News October 19, 2025
பாக்.,ன் கோழைத்தனமான தாக்குதல்: BCCI

ஆப்கனில் பாக்., நடத்திய வான்வழி தாக்குதலில் கபீர், சிப்கதுல்லா & ஹாரூன் ஆகிய 3 உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், இவர்களது இறப்புக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள BCCI, உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறியுள்ளது. பாக்.,ன் இந்த தாக்குதல் கோழைத்தனமானது என்றும் கண்டனம் தெரிவித்துள்ளது. விளையாட்டு வீரர்களின் இழப்பு கவலைக்குரிய ஒன்று எனவும் குறிப்பிட்டுள்ளது.
News October 19, 2025
சாப்பிட்ட உடனே வாக்கிங் செல்லலாமா?

சாப்பிட்ட பின் நடப்பது உடல்நலத்துக்கு நல்லது தான். ஆனால், சாப்பிட்ட உடனேயே அதை செய்ய வேண்டாம் என்கின்றனர் டாக்டர்கள். சாப்பிட்டவுடன் நடப்பது வயிறு உப்புசத்தை ஏற்படுத்தும். அதனால் சாப்பிட்டு குறைந்தது 10 – 15 நிமிடத்துக்கு பின் நடக்கலாம். 30 நிமிடத்துக்கு பின் வாக்கிங் செல்வது ஜீரணத்தை மேம்படுத்துவதுடன் உடல்பருமனை குறைக்கவும் உதவுமாம். பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.
News October 19, 2025
சாபத்தால் தீபாவளி கொண்டாடாத கிராமம்

சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு இமாச்சலின் சம்மூ கிராமத்தில் கர்ப்பிணி ஒருவர் தீபாவளியை கொண்டாட தயாரானார். அப்போது இறந்த அவளது கணவரின் உடல் வீட்டிற்கு வர, உடன்கட்டை ஏறினாள். அதற்கு முன்பு, ‘இந்த ஊர் மக்கள் தீபாவளியை கொண்டாடவே முடியாது’ என சாபமிட்டாள். இதன் பிறகு தீபாவளி கொண்டாடியபோதெல்லாம் இறப்பு (அ) பேரழிவு ஏற்பட்டுள்ளது. சாபத்தாலேயே இவ்வாறு நடப்பதாக, இதுவரை அவர்கள் தீபாவளி கொண்டாடவில்லை.