News June 20, 2024
விஜய்யை கட்டி கதறிய பெண்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததில், உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, உடல்நலம் பாதிக்கப்பட்டவரின் மனைவி விஜய்யை கட்டி கதறிய காட்சி காண்போரை கலங்க செய்தது. அவருக்கு ஆறுதல் கூறிய விஜய், தேவையான உதவிகளை செய்வதாக கூறியுள்ளார்.
Similar News
News November 15, 2025
இன்னும் சற்று நேரத்தில் ராகுல் காந்தி ஆலோசனை

பிஹார் தேர்தலில் 61 இடங்களில் போட்டியிட்ட காங்., 6 இடங்களில் மட்டுமே வென்றது. தேசிய கட்சியான காங்.,கிற்கு இது பெரும் பின்னடைவாக அமைந்தது. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் தொடர்பாக, கட்சியின் மூத்த தலைவர்களுடன், மதியம் 12:00 மணிக்கு ராகுல் காந்தி ஆலோசனை நடத்தவுள்ளார். தொடர் தோல்விகள் தொடர்பாகவும், கட்சியின் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது.
News November 15, 2025
கஞ்சா கேள்வி: ‘இட்லி, தோசை’ என நயினார் பதில்!

தமிழகத்தில் கிராமங்களிலும் கஞ்சா பயன்பாடு அதிகரித்து வருவதாக நயினார் நாகேந்திரன் பேட்டியளித்தார். அப்போது இடைமறித்த செய்தியாளர், ‘குஜராத்தில் அதிக கஞ்சா பிடிபட்டுள்ளதே?’ என கேட்க, சற்று பின்வாங்கிய நயினார், ‘முதலில் இட்லி, தோசை சாப்பிடுங்கள், அப்புறம் சப்பாத்தி சாப்பிடுங்கள்’ என்றார். அதாவது, முதலில் தமிழகத்தை கவனியுங்கள், பிறகு குஜராத்தை பற்றி பேசலாம் எனக்கூறி, சந்திப்பை முடித்து கொண்டார்.
News November 15, 2025
BREAKING: வங்கிக் கணக்கில் ₹1,000 வந்தது.. செக் பண்ணுங்க

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் 27-வது தவணை ₹1,000 சற்றுமுன் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. மொத்தம் 1.15 கோடி பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டதாக அரசு கூறியுள்ளது. மேலும், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் மூலம் விடுபட்ட நபர்களிடம் இருந்து உரிமைத் தொகைக்கு பெறப்பட்ட விண்ணப்பங்களை இறுதி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அவர்களுக்கும் விரைவில் ₹1,000 வழங்கப்படும் எனவும் தெரிகிறது.


