News May 17, 2024
10ம் வகுப்பில் 99.70% மதிப்பெண் பெற்ற சிறுமி மரணம்

குஜராத் மாநிலம் மோர்பியை சேர்ந்த ஹீர் கெதியா (16) என்ற சிறுமி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.70% மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்திருந்தார். எனினும், இந்த மகிழ்ச்சி சிறுமியின் பெற்றோருக்கு நீண்ட காலம் நீடிக்கவில்லை. மருத்துவராக விரும்பிய அச்சிறுமிக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. அதற்கான அறுவை சிகிச்சை செய்தபோதும், அது பலனளிக்காமல் அவர் மரணமடைந்ததாக அவரது பெற்றோர் உருக்கமாக கூறினர்.
Similar News
News August 27, 2025
இடுப்பை வலுப்படுத்தும் பத்த கோணாசனம்!

✦மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அசௌகரியங்களை போக்க உதவுகிறது.
➥தரையில் அமர்ந்து, முதுகை நேராக வைத்து, கால்களை நேராக முன்னோக்கி நீட்டி அமரவும்.
➥முழங்கால்களை வளைத்து, பாதங்களை சேர்த்து, உள்ளங்கால்கள் இரண்டும் ஒட்டியிருக்கும் படி பிடித்துக் கொள்ளவும்.
➥கைகளால் முழங்கால்களை மெதுவாக தரை நோக்கி அழுத்தவும்.
➥இந்த நிலையில், 15- 20 விநாடிகள் இருந்துவிட்டு, பிறகு பழைய நிலைக்கு திரும்பவும். SHARE IT.
News August 27, 2025
அரசியல் நாகரிகத்துடன் பேச வேண்டும்: OPS

தவெக மாநாட்டில் விஜய்யின் பேச்சுகளில் சில ஏற்புடையதாக இல்லை என OPS சாடியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் கட்சியின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் அரசியல் நாகரிகம் கருதி பேச வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மதுரை மாநாட்டில், முதல்வரை ‘ஸ்டாலின் Uncle’ என விஜய் கூறியதற்கு முக்கிய அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
News August 27, 2025
Vinayagar Chathurthi: இந்த மந்திரத்தால் செல்வம் பெருகும்!

இன்று விநாயகர் சதுர்த்தி தினத்தில், இந்த ஒரு மந்திரத்தை சொன்னால் போதும், 7 ஜென்மத்து பாவங்களும் நீங்கும் என நம்பப்படுகிறது. மேலும், வீட்டில் செல்வம் பெருகி, மகிழ்ச்சி கூடும் எனவும் கூறப்படுகிறது.
மந்திரம்:
ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப் புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே. SHARE IT.