News March 2, 2025

ஞானத்தை அள்ளித் தரும் விநாயகர் காயத்ரி மந்திரம்!

image

ஞானத்தை அள்ளித் தரும் விநாயக காயத்ரி மந்திரம்:
ஓம் ஏகதந்தாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி பிரச்சோதயா
பொருள் :
வளைந்த யானைத் தும்பிக்கையைக் கொண்டவரே நான் பணிவுடன் உயர்ந்த புத்தியை நாடுகிறேன்.
என் வாழ்க்கையை ஞானத்தால் ஒளிரச் செய்ய மகிமை மிக்கவரை வணங்குகிறேன். எங்கும் நிறைந்த, ஒற்றைத் தந்தத்தையுடைய தெய்வீகப் பெருமானை நான் வணங்குகிறேன்.

Similar News

News July 8, 2025

நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம்

image

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. இதில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஆகிய தொழிற்சங்கங்கள் பங்கேற்பது மட்டுமல்லாமல், அவர்கள் அழைப்பும் விடுத்துள்ளனர். ஆனால், அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம் பங்கேற்கவில்லை. இருப்பினும் பஸ்கள், ஆட்டோக்கள் சேவையில் பாதிப்பு இருக்கும் என தொழிற்சங்க நிர்வாகிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

News July 8, 2025

சாதி பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய ரஷ்மிகா

image

கொடவா சமூகத்தில் இருந்து திரைத்துறையில் நுழைந்த முதல் நடிகை தான் தான் என்று ரஷ்மிகா மந்தனா கூறியது சர்ச்சையாகியுள்ளது. ஏனென்றால், இச்சமூகத்தில் இருந்து பிரேமா, தஸ்வினி, கரும்பையா, ரீஷ்மா, ஸ்வேதா, வர்ஷா பொல்லம்மா, ஹரிசிகா பூனாச்சா, சுப்ரா அய்யப்பா ஆகியோர் திரைக்கு வந்துள்ளனர். இதனால், ரஷ்மிகாவின் கருத்துக்கு அச்சமூக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

News July 8, 2025

டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு: இஸ்ரேல் கடிதம்

image

USA அதிபர் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று நோபல் பரிசு கமிட்டிக்கு கடிதம் அனுப்பி பரிந்துரைத்துள்ளதாக இஸ்ரேல் PM நெதன்யாகு தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இரவு விருந்தில், தனிப்பட்ட முறையில் டிரம்ப்பிடமும் அக்கடிதத்தை அவர் கொடுத்தார். இதற்கு தகுதியான நீங்கள் நிச்சயம் விருதை வெல்வீர்கள் என்றும் அவர் US அதிபரிடம் கூறினார். இது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

error: Content is protected !!