News August 8, 2025
ஆடி வெள்ளியுடன் வரும் பெளர்ணமி

ஆடி மாதத்தின் 4ம் வெள்ளியான இன்று பெளர்ணமி திதியும் சேர்ந்து வருகிறது. ஆகையால் இன்றைய தினத்தில் அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட்டால் குடும்பத்தில் நிம்மதி பெருகும் என்பது ஐதீகம். சிவனுக்கு பாலபிஷேகம் செய்து, மூங்கில் அரிசிப் பாயாசம் படைத்து வழிபட்டால் சிவ பெருமானின் அருள் கிடைக்கும். மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும் என நம்பப்படுகிறது.
Similar News
News August 8, 2025
திமுகவுக்கு ஊழலுக்கான விருது: EPS காட்டம்

திமுகவின் 50 மாத ஆட்சியில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாகவும் அனைத்து துறைகளிலும் ஊழல் நடப்பதாகவும் EPS குற்றம்சாட்டியுள்ளார். சிவகாசியில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர், 4 ஆண்டுகளில் சுமார் 22,000 கோடி கொள்ளை அடித்துள்ளதாகவும், ஊழலுக்காக அவர்களுக்கு விருது கொடுக்க வேண்டும் என்றும் காட்டமாக விமர்சித்தார். மேலும், VCK, CPM, CPI, காங்கிரஸ் என கூட்டணி கட்சிகளை நம்பியே திமுக இருக்கிறது என்றார்.
News August 8, 2025
உடல் எடையை குறைக்க உதவும் புரதம் நிறைந்த லஞ்ச்

எடையை குறைக்க உதவும் புரதம் நிறைந்த உணவுகளில் ஒன்று பனீர் புர்ஜி. செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி அடுத்து சீரகம் சேர்த்து, பிறகு வெங்காயம் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கி, இஞ்சி-பூண்டு விழுது சேர்க்கவும். தொடர்ந்து தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, கரம் மசாலா, மிளகாய் தூளையும் கலக்கவும். பின் அரைத்த பனீர் சேர்த்து கலக்கி இறுதியில் கொத்தமல்லி சேர்க்கவும். சத்தான மதிய உணவு தயார்.
News August 8, 2025
திமுக மூத்த தலைவர் இரெ.கோவிந்தசாமி மறைந்தார்

திமுகவின் நீண்ட கால உறுப்பினரும், தொமுச Ex தலைவருமான இரெ.கோவிந்தசாமி காலமானார். திமுகவின் தொழிற்சங்கமான தொமுச பேரவையின் அதிகாரப்பூர்வ மாத இதழான ‘உழைப்பாளி’ மாத இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். அவரது மறைவுக்கு திமுக Ex MP சண்முகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் நேரில் அஞ்சலி செலுத்தினர். சென்னை மேற்குத் தாம்பரத்தில் உள்ள வீட்டில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. #RIP