News August 18, 2024

தவெக கொடி தயாரிப்பு பணிகள் மும்முரம்

image

திருப்பூரில் தவெக கொடி தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. ஆக.22இல் கட்சிக்கொடியை விஜய் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் அறிமுகப்படுத்தியதும், அனைத்து மாவட்ட கட்சி அலுவலகங்களிலும் கொடி ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, செப்டம்பரில் விக்கிரவாண்டியில் தவெக முதல் மாநாடு நடக்கிறது. இதனால், மாநாட்டிற்கு செல்வோர் கட்சிக்கொடியுடன் செல்லும் வகையில் ஏற்பாடுகள் நடக்கின்றன.

Similar News

News September 17, 2025

குழந்தைகள் விரல் சூப்புவதை நிறுத்துவது எப்படி?

image

குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கமானது 3 வயது வரை இருக்கலாம். அதற்கும் மேலே தொடரும்போது, அவர்களுக்கு பல் சார்ந்த பிரச்னைகளும் பேச்சுத்திறன் குறைபாடுகளும் ஏற்படக்கூடும். இதனை தடுக்க ➤குழந்தையின் விரலில் வேப்பெண்ணையை தடவலாம், ➤இப்பழக்கத்தினால் ஏற்படும் விளைவுகளை எடுத்துரைக்கலாம். ➤தீவிரமாக இருக்கும் பட்சத்தில் குழந்தைகள் நலமருத்துவரின் உதவியை நாடலாம். SHARE.

News September 17, 2025

கணவருக்கு இது தார்மீக பொறுப்பு: கொல்கத்தா HC

image

நல்ல உடல்தகுதியுள்ள கணவர், மனைவிக்கு பராமரிப்பு தொகை வழங்குவது என்பது சமூக, தார்மீக பொறுப்பு என்று கொல்கத்தா HC தெரிவித்துள்ளது. தனக்கு வேலையும் வருமானமும் இல்லை என்ற கணவரின் வாதத்தை ஏற்க மறுத்த HC, பராமரிப்பு தொகையாக மாதம் ₹4,000 வழங்க உத்தரவிட்டுள்ளது. கணவனின் குடும்பத்தார் விவாகரத்து கோர வற்புறுத்தியதால், பராமரிப்பு தொகை வழங்க கோரிய மருமகளின் மனு மீது இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 17, 2025

நானும் Peak-ல இருக்கும்போது தான் வந்தேன்: சரத்குமார்

image

கரியரின் உச்சத்திலிருந்து வந்துள்ளேன், நான் சம்பாதிக்காத பணமா? என்ற விஜய்யின் பேச்சுக்கு சரத்குமார் பதிலடி கொடுத்துள்ளார். 1994-ல் நாட்டாமை, சூர்யவம்சம் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்துதான் நானும் அரசியலுக்கு வந்ததாக கூறியுள்ளார். ரிட்டயர்மன்ட்டுக்கு பிறகு தான் அரசியலுக்கு வரவில்லை என்ற அவர், மதுரையில் தனது கட்சிக்கும் கூட்டம் கூடியது, அதன் வீடியோவை கூட நான் காட்டுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!