News May 9, 2024
‘ராயன்’ படத்தின் முதல் பாடல் இன்று வெளியீடு

தனுஷ் இயக்கி, நடிக்கும் அவரது 50ஆவது படமான ‘ராயன்’ வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. படப்பிடிப்பு முடிந்த நிலையில், போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான “அடங்காத அசுரன்…” இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ள படக்குழு, அதற்கான போஸ்டரை வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
Similar News
News November 17, 2025
Delhi Blast: உயிரிழந்தோர் எண்ணிக்கை 15-ஆக உயர்வு

டெல்லி குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 10-ம் தேதி செங்கோட்டை பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் ஏற்கெனவே 13 பேர் உயிரிழந்திருந்தனர். படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.

₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. இனிமேல் கிடைக்காது

தகுதிவாய்ந்த மகளிராக இருந்தாலும் இனி மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பிக்க முடியாது. ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நிறைவடைந்துவிட்டன. இதுவரை சுமார் 30 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வு செய்யப்பட்ட, செய்யப்படாதவர்களின் விவரங்களை டிசம்பர் முதல் வாரத்தில் அரசு தெரிவிக்க உள்ளது. டிச.15-ல் புதியவர்களுக்கும் ₹1,000 டெபாசிட் செய்யப்படும். விண்ணப்பிக்காதவர்கள் அடுத்த அறிவிப்பு வரை காத்திருக்கவும்.