News June 8, 2024

18ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர்!

image

18ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இம்மாதம் 15 – 22 வரை நடைபெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது. NDA கூட்டணி அமைச்சரவை நாளை பதவியேற்ற பிறகு, மாலை நடைபெறும் கூட்டத்தில் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. முதல்நாள் எம்.பி.,க்கள் பதவி பிரமாணம் நிகழ்வும், அவையின் தலைவர் தேர்வும் நடக்கும். அதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் அவையில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News September 24, 2025

பாலிவுட்டில் களமிறங்கும் அர்ஜுன் தாஸ்

image

‘கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக கலக்கியவர் அர்ஜுன் தாஸ். தற்போது கதாநாயகனாக நடித்து வரும் அவர், தெலுங்கில் பவன் கல்யாணின் ‘OG’ படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் அர்ஜுன் தாஸ் களமிறங்க உள்ளார். ‘டான் 3’ படத்தில் ரன்வீர் சிங்குக்கு வில்லனாக அவர் நடிக்க போகிறாராம். விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாம்.

News September 24, 2025

பாஜகவில் கோஷ்டி பூசல் இல்லை: வானதி சீனிவாசன்

image

திமுகவை வீழ்த்தும் ஒரே சக்தி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான் உண்டு என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். பாஜகவில் எந்த கோஷ்டி பூசலும் இல்லை என கூறிய அவர், அண்ணாமலை கூட்டணியை பலப்படுத்தும் முயற்சிகளையே செய்து வருவதாகவும் விளக்கினார். கடந்த காலங்களில் GST வருவாய் அதிகரித்ததால்தான் ₹12 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்க முடிந்ததாகவும் அவர் கூறினார்.

News September 24, 2025

ASIA CUP: இந்தியாவை வங்கதேசம் சமாளிக்குமா?

image

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இன்று இந்தியா வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காத ஒரே அணியாக உள்ள இந்தியா, வங்கதேசத்தை எளிதாக வீழ்த்திவிடும் என்றே கணிக்கப்படுகிறது. இரு அணிகளும் இதுவரை விளையாடியுள்ள 17 டி20 போட்டிகளில் வங்கதேசம் ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. பேட்டிங், பவுலிங்கில் வலுவாக உள்ள இந்திய அணியை சமாளிப்பது வங்கதேசத்துக்கு பெரும் சவாலாகவே இருக்கப்போகிறது.

error: Content is protected !!