News April 25, 2025
ரெட்ரோவின் முதல் விமர்சனம்!

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் மே 1-ம் தேதி ரிலீஸாக இருக்கும் ‘ரெட்ரோ’ பெரிய எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது. படம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் ஆவலில் இருக்கும் நிலையில், படத்தை பார்த்த சூர்யாவிற்கு முழு திருப்தி ஏற்பட்டதாம். நல்லா வந்துருக்கு என சூர்யா தன்னிடம் கூறியதாக கார்த்திக் சுப்புராஜ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். யாரெல்லாம் படம் பாக்க வெயிட்டிங்?
Similar News
News October 24, 2025
பருவமழை, புயல்: CM முக்கிய ஆலோசனை

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக்கடலில் வரும் 27-ம் தேதி புயலும் உருவாக உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பரவலான கனமழைக்கு வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் இதுவரையிலான பாதிப்புகள் குறித்து CM ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
News October 24, 2025
BREAKING: உருவாகிறது Montha புயல்.. சென்னை மக்களே ALERT

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக உருவெடுக்கும் என IMD கணித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, 26-ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையும். அதன்பின், 27-ம் தேதி புயலாக வலுப்பெறும். இந்த புயலுக்கு Montha என பெயரிடப்பட்டுள்ளது. புயல் எதிரொலியாக 27-ம் தேதி சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
News October 24, 2025
நீங்கள் கால் பதிக்க முடியாத இடங்கள் PHOTOS

உலகில் சில இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாதுகாப்பு, ரகசியம் என்று பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அரசால் தடை செய்யப்பட்டுள்ள சில இடங்களை மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அதை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று உங்களுக்கு தெரிந்த கால் பதிக்க முடியாத வேறு இடம் ஏதேனும் இருந்தால் கமெண்டில் சொல்லுங்க.


