News April 11, 2025
ராணாவை US ஒப்படைத்த முதல் ஃபோட்டோ!

அமெரிக்காவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். 18 நாள் காவலில் வைத்து தாக்குதல் குறித்த சதித் திட்டங்களை கேட்டறிய அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். இந்தச் சூழலில், ராணாவை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்த முதல் ஃபோட்டோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் அமெரிக்க சிறை கைதிகளின் உடையிலேயே இருக்கிறார்.
Similar News
News December 9, 2025
55,000 பேருக்கு புதிய ரேஷன் கார்டு

ரேஷன் கார்டுதாரர்களுக்கு, அடுத்த மாதம் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், புதிய கார்டு கோரி பெறப்பட்ட விண்ணப்பங்களில் 1.07 லட்சம் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதில் தகுதியான 55,000 பேருக்கு ஒரு சில நாள்களிலும், மற்றவர்களுக்கு இம்மாத இறுதிக்குள்ளும் கார்டுகள் வழங்க உள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
News December 9, 2025
இன்று முதல் டி20: வெற்றியை தொடருமா இந்தியா?

SA அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி, இன்று கட்டாக்கில் நடைபெற உள்ளது. இந்த மைதானம் பேட்ஸ்மென்களுக்கு சாதகமானது என்பதால், அதிக ஸ்கோர் அடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், இந்த மைதானத்தில் நடந்த SA-க்கு எதிரான 3 டி20-ல், 2-ல் இந்தியா தோற்றுள்ளது. டெஸ்ட்டில் SA-வும், ODI-ல் இந்தியாவும் வென்ற நிலையில், டி20-ல் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
News December 9, 2025
சென்னை சர்வதேச திரைப்பட விழா அறிவிப்பு

23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா வரும் 11 முதல் 18-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 27 மொழிகளில் இருந்து 51 நாடுகளை சேர்ந்த 122 படங்கள் திரையிடப்பட உள்ளன. தமிழில் இருந்து பாட்ஷா, அலங்கு, வேம்பு, டூரிஸ்ட் ஃபேமிலி, 3 BHK, மாமன் உள்ளிட்ட 12 படங்கள் திரையிடப்பட உள்ளன. இதற்காக ராயப்பேட்டை PVR சத்யம் சினிமாஸ், சிட்டி செண்டர் INOX தியேட்டர்களில் ஒதுக்கப்பட்டுள்ளன.


