News April 16, 2025
ஜிகு ஜிகு ரயிலின் முதல் பயணம்…

இந்தியாவின் முதல் ரயில் சேவை தொடங்கியது எப்போது தெரியுமா? 1853, ஏப்ரல் 16-ம் தேதி தான். 21 குண்டுகள் முழங்க, 3 இன்ஜின்கள், 14 பெட்டிகளுடன் தொடங்கியது. போரி பந்தர்-தானே வரை 34 கி.மீ தூரத்தை 1.15 மணி நேரத்தில் கடந்த ரயிலில் 400 பேர் பயணித்தனர். ரயில்வேயின் 172வது ஆண்டையொட்டி மலரும் நினைவுகளை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பகிர்ந்துள்ளார். அந்த போரி பந்தர் தான் மும்பை CST ரயில் நிலையம்.
Similar News
News January 18, 2026
காரைக்குடி: வீட்டில் புகுந்த பாம்பு – பரபரப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சி 27-வது வாா்டு பாரதியாா் தெருவில் உள்ள செல்வி என்பவரது வீட்டில் நேற்று பாம்பு ஒன்று புகுந்தது. உடனடியாக அருகிலுள்ளவர்கள் காரைக்குடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் பாம்பை உயிருடன் மீட்டு அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்பட்டது.
News January 18, 2026
குலசை அருகே விபத்தில் முதியவர் உயிரிழப்பு

காயல்பட்டினத்தைச் சேர்ந்த சையது இப்ராகிம் (78) என்பவர் அப்பகுதியில் மாவு மில் நடத்தி வந்தார். இந்நிலையில் மாவு இயந்திரம் கோளாறு காரணமாக அதனை சரி செய்வதற்கு குலசை அருகே வந்த போது அவரது மோட்டார் சைக்கிள் மீது மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சையது இப்ராஹீம் உயிரிழந்த நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 18, 2026
டிரம்ப்புக்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு!

காசாவை நிர்வகிக்க டிரம்ப் அமைத்துள்ள <<18870153>>அமைதி வாரியத்திற்கு<<>> இஸ்ரேல் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த குழுவை அறிவிக்கும் முன் USA தங்களிடம் கலந்து ஆலோசிக்கவில்லை என்றும், தங்கள் கொள்கைகளுக்கு இது எதிரானது எனவும் என இஸ்ரேல் PM நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. குழுவில் துருக்கி அமைச்சர் இடம்பெற்றிருப்பதே எதிர்ப்புக்கு காரணம் என கூறப்படும் நிலையில், இஸ்ரேல்-USA உறவில் புதிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது.


