News March 28, 2025
தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டம்

தவெகவின் முதல் அரசியல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுவதையொட்டி, அக்கட்சி நிர்வாகிகள் குவிந்துள்ளனர். காலை 9 மணிக்கு தொடங்கும் கூட்டத்தில், விஜய் பங்கேற்கிறார். இதில், மத்திய – மாநில அரசுகளை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது. தேர்தல் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கும் விஜய், சில முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட உள்ளதாக தவெக நிர்வாகிகள் கூறுகின்றனர்.
Similar News
News March 31, 2025
சிஎஸ்கேவை முந்திய ஆர்சிபி… எதில் தெரியுமா?

இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்ஸ் கொண்ட அணி என்ற சாதனையை நீண்டகாலமாக சிஎஸ்கே தன்வசம் வைத்திருந்தது. தற்போது அதனை ஆர்சிபி கைப்பற்றியுள்ளது. 17.8 மில்லியன் பாலோயர்ஸ் உடன் ஆர்சிபி முதலிடத்தில் உள்ளது. 17.7 மில்லியன் பாலோயர்ஸ் உடன் சிஎஸ்கே இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆனா, இதுக்கெல்லாம் கப்பு தரமாட்டாங்க என சிஎஸ்கே ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
News March 31, 2025
அஜித்துடன் 100 நாட்கள்… ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சி!

ஏப்.10-ல் வெளியாகும் குட் பேட் அக்லி படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அஜித்துடன் பணியாற்றியது குறித்து ஆதிக் மனம் திறந்துள்ளார். அஜித் தனது வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளதாகவும், அவருடன் பணியாற்றிய 100 நாள்களும் அவரது படத்தின் FDFS பார்த்த அனுபவம் கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அஜித் தூய்மையான இதயம் கொண்டவர் என்றும் ஆதிக் தெரிவித்துள்ளார்.
News March 31, 2025
103 மருந்துகள் தரமற்றவை

நாட்டில் விற்பனை செய்யப்படும் மருந்துகளில் 103 மருந்துகள் தரமற்றவை என்று மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் இவை தரமற்றவை என்று கண்டறியப்பட்டுள்ளது. தரமற்ற மருந்துகளை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.