News June 17, 2024
ரஜினியிடம் வழங்கப்பட்ட முதல் நினைவு முத்திரை

இலங்கை பெருந்தோட்ட சமூகத்தின் 200ஆவது ஆண்டு நிறைவையொட்டி உருவாக்கப்பட்ட நினைவு முத்திரை, நடிகர் ரஜினிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சென்ற தமிழர்கள், 200 ஆண்டுகளுக்கும் மேலாக தேயிலை காடுகளில் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த அமைப்பானது 200ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது . அதற்கான நினைவு முத்திரையின் முதல் பிரதி ரஜினிக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 2, 2026
குலுங்கி குலுங்கி சிரிக்கும் நோய் தெரியுமா?

சந்தோஷத்தில் மட்டுமல்ல, நோயால்கூட சிரிப்பு வரும். ஆம், வெடித்துச் சிரிப்பது (அ) கெக்கலிக்கும் ‘Laughing Epilepsy’ என்ற ஒருவகை அரிய நோய் உள்ளதாம். மூளையின் ஹைப்போதாலமஸ் பகுதியில் ஏற்படும் பாதிப்பால் வலிப்புடன் சிரிப்பு வருவதே இதன் அறிகுறி. இந்நோய் பாதித்த ஒருவருக்கு சிக்கலான சர்ஜரி செய்து குணப்படுத்தியுள்ளனர் ஜோத்பூர் எய்ம்ஸ் டாக்டர்கள். நாட்டிலேயே 2 ஹாஸ்பிடல்களில் தான் இச்சிகிச்சை வசதி உள்ளதாம்.
News April 2, 2026
உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு வெளியானது!

DCM உதயநிதி ஸ்டாலின் தனக்கு ₹12.92 கோடிக்கு அசையும் சொத்துகளும், ₹7.72 கோடிக்கு அசையா சொத்துகளும் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். இதில் ₹1 கோடி மதிப்புள்ள டிஃபெண்டர் காரும் அடங்கும். அவரது மனைவி கிருத்திகாவிடம் ₹1.87 கோடி மதிப்பிலான 1,600 கிராம் தங்கம் உள்பட ₹13.25 கோடி அசையும் சொத்துகள் உள்ளதாகவும், அசையா சொத்துகள் எதுவுமில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. <<-se>>#TNElection2026<<>>
News April 2, 2026
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தாரா அண்ணாமலை?

தேர்தலில் போட்டியில்லை, ஆலோசனைக் கூட்டங்கள் புறக்கணிப்பு என அண்ணாமலையின் செயல்பாடுகளால் பாஜகவினர் அதிர்ச்சியில் உள்ளதாக பேச்சு எழுந்தது. அவரை சமாதானம் செய்ய பாஜக தலைமை ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கோவையில் பிரசார களத்தில் அண்ணாமலையை இறக்க அதிமுக விரும்புகிறதாம். அக்கட்சியின் வேட்பாளர்கள் அம்மன் அர்ஜுனன், ஜெயராம் ஆகியோர் அண்ணாமலையை நேரில் சந்தித்த போட்டோக்கள் வெளியாகியுள்ளது.


