News March 26, 2025
‘வீர தீர சூரன்’ படம் நாளை ரிலீஸ் இல்லை!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விக்ரமின் ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தை நாளை வெளியிட டெல்லி ஐகோர்ட் தடை விதித்துள்ளது. படத்தின் வெளியீடு தொடர்பாக தங்கள் விதிகளை மீறியதால், இப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி IVY ஃபைனான்ஸ் நிறுவனம் மனு தாக்கல் செய்தது. இதனை விசாரித்த டெல்லி ஐகோர்ட், மனுதாரரின் அனுமதியின்றி ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என உத்தரவிட்டது.
Similar News
News December 3, 2025
BREAKING: இந்தியா பேட்டிங்

ராய்ப்பூரில் நடக்கும் இந்தியாவுக்கு எதிரான 2-வது ODI-யில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தியா பிளேயிங் XI: ரோஹித், ஜெய்ஸ்வால், கோலி, KL ராகுல், ருதுராஜ், ஜடேஜா, சுந்தர், குல்தீப், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா. முதல் போட்டியை போலவே 2-வது போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றுமா இந்தியா?
News December 3, 2025
வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ₹67,004 கோடி!

கடந்த 10 ஆண்டுகளாக எந்த பரிவர்த்தனையும் இல்லாத வங்கி கணக்குகளில் சுமார் ₹67,004 கோடி கேட்பாரற்ற முறையில் இருப்பதாக மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார். இதில் அதிகபட்சமாக SBI வங்கியில் மட்டும் ₹19,330 கோடி உள்ளதாம். மேலும், ‘உங்கள் பணம், உங்கள் உரிமை’ என்ற திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் ₹10,297 கோடி உரிமையாளர்களுக்கு திரும்ப அளிக்கப்பட்டுள்ளதாம்.
News December 3, 2025
11 ஆண்டுகளுக்கு முன் நடந்த மர்மத்துக்கு பதில் கிடைக்குமா?

2014-ல் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்கிற்கு 227 பயணிகள், 12 ஊழியர்களுடன் சென்ற MH370 விமானம் மாயமானது. அதில் பயணித்தவர்களின் நிலையும் தெரியாததால், தேடுதல் பணி தீவிரமாக நடந்தது. ஆனால் விமானம் பற்றிய தகவல் கிடைக்கவில்லை என்பதால் 2017-ல் தேடுதல் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், விமானத்தை மீண்டும் தேட மலேசிய அரசு முடிவெடுத்துள்ளது. டிச.30-ல் தொடங்கும் இப்பணி, 55 நாள்களுக்கு நடக்கவுள்ளது.


