News April 3, 2025
எம்புரான் படத்தை தடை செய்ய வேண்டும்: வைகோ

முல்லைப் பெரியார் அணை குறித்து தவறான தகவல்களைப் பரப்பும் ‘எம்புரான்’ படத்தை தடை செய்ய வைகோ வலியுறுத்தியுள்ளார். அணை அருகில் வைக்கப்பட்டிருக்கும் வெடிகுண்டு எப்போது வேண்டுமானாலும் வெடித்து கேரளா நீரில் மூழ்கலாம் என கேரள மக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் வசனங்களை அமைத்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். முன்னதாக, தவாக தலைவர் வேல்முருகனும் இப்படத்தை தடை செய்ய கோரிக்கை விடுத்திருந்தார்.
Similar News
News November 5, 2025
எதிர்பார்த்த வசூலை குவிக்காத பாகுபலி: தி எபிக்?

பத்து ஆண்டுகள் கழித்து அக்.31-ம் தேதி ரீ-ரிலீசானது பாகுபலி: தி எபிக் திரைப்படம். இப்படம் வெளியான 5 நாட்களில் இந்தியாவில் ₹27.3 கோடி வசூல் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரீ-ரிலீஸ் படத்துக்கு இது ஒரு நல்ல வசூல்தான். ஆனால் இப்படத்திற்கு இருந்த ஹைப்பால் வசூல் அதிபயங்கரமாக இருக்கும் என கணிக்கப்பட்டது. இதனால் படக்குழு சிறிது ஏமாற்றமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
News November 5, 2025
கூட்டணி.. சற்றுநேரத்தில் விஜய் முக்கிய அறிவிப்பு

விஜய் தலைமையில் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்னும் சற்றுநேரத்தில் தொடங்கவிருக்கிறது. இதில் ‘கூட்டணி’ தொடர்பாக முக்கியமான தீர்மானத்தை நிறைவேற்றி, விஜய் புதிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி குறித்து கட்சி நிர்வாகிகளுடன் விரிவாக ஆலோசனை செய்யும் விஜய், கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வு, தேர்தல் பரப்புரை உள்ளிட்டவை குறித்து முக்கிய முடிவு எடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
News November 5, 2025
நாட்டின் டாப் 10 பணக்கார மாநகரங்கள் இதுதான்!

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில், நாட்டின் மாநகரங்களின் பொருளாதார மதிப்புகள் கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் எந்த மாநகரம் அதிக மதிப்பு கொண்டது என்பதை அறிய, மேலே உள்ள போட்டோவை வலது பக்கம் Swipe பண்ணுங்க. இதில், ஆச்சரிய விஷயம் என்னவென்றால், நாட்டின் 4-வது பணக்கார நகரமான பெங்களூருவை விட அம்பானியின் சொத்து மதிப்பு அதிகம்.


