News December 4, 2024

‘புஷ்பா 3’ குறித்த பதிவை நீக்கிய படக்குழு

image

அல்லு அர்ஜுன் நடிப்பில் ‘புஷ்பா-3’ வெளியாவதை ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் இன்ஜினியர் ரசூல் பூக்குட்டி மறைமுகமாக உறுதி செய்துள்ளார். ‘புஷ்பா 2: தி ரூல்ஸ்’ படத்தின் இசைப் பணிகள் முடிந்ததை குறிக்கும் வகையில் ஒரு புகைப்படத்தை படக்குழு வெளியிட்டது. அதில், ரசூல் உள்ளிட்டோர் நிற்க, பின்புற திரையில் ‘புஷ்பா 3: தி ராம்பேஜ்’ என எழுதப்பட்டிருந்தது. இப்பதிவு வைரலானதை அடுத்து படக்குழு உடனே அதை நீக்கியுள்ளது.

Similar News

News November 19, 2025

விஜய் RSS சித்தாந்தத்துடன் ஒன்றுபட்டவர்: அப்பாவு

image

SIR-க்கு எதிராக தவெக நடத்திய போராட்டம் வெறும் கண்துடைப்பு என சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார். உண்மையில் SIR-ஐ எதிர்ப்பதாக இருந்தால் விஜய் SC-ல் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். மேலும் விஜய், RSS சித்தாந்தத்துடன் ஒன்றுபட்டுள்ளதாகவும், இருவரும் ஒன்றிணைவார்கள் எனவும் பேசியுள்ளார். SIR-க்கு எதிராக விஜய் போட்ட வீடியோவில் மத்திய அரசை விமர்சிக்கவில்லை எனவும் சாடியுள்ளார்.

News November 19, 2025

RB உதயகுமாருடன் கூட்டணி பற்றி பேசவில்லை: பிரேமலதா

image

அதிமுக Ex அமைச்சர் RB உதயகுமாருடன் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என பிரேமலதா கூறியுள்ளார். இது நட்புரீதியான சந்திப்பு மட்டுமே எனவும், அவரது தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். முன்னதாக, அதிமுக கூட்டணியில் இணைய தேமுதிக, பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. குறிப்பாக, தேமுதிக மா.செ.,க்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு சந்தித்ததால் அரசியலில் கூடுதல் கவனத்தை பெற்றிருந்தது.

News November 19, 2025

BREAKING: அதிமுக கூட்டணியில் இணைந்தனர்

image

2026-ல் வலுவான கூட்டணியை அமைக்க திட்டமிட்டு, பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் அதிமுக தலைமை பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. இந்நிலையில், ராஜகம்பள சமுதாய நலச் சங்க மாநிலச் செயலாளர் செந்தில்குமார், வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத் தலைவர் P.S. மணி உள்ளிட்டோர் EPS-ஐ சந்தித்தனர். அப்போது 2026 தேர்தலில் அதிமுகவுக்கு தங்கள் சங்கங்களின் முழு ஆதரவை அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!