News August 31, 2025
அனல் பறக்கும் புரோ கபடி லீக்

12-வது புரோ கபடி லீக் நேற்று முந்தினம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றைய, தெலுங்கு டைட்டன்ஸ் – உ.பி. யோத்தாஸ் ஆட்டம் கடைசி வரை பரபரப்பாக சென்றது. இறுதியில் 40- 35 என்ற கணக்கில் உ.பி. யோத்தாஸ் வெற்றி பெற்றது. அதேபோல், கடைசி நொடிவரை த்ரில்லிங்காக சென்ற யு மும்பா – குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையேயான மற்றொரு ஆட்டம், 29-29 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.
Similar News
News August 31, 2025
தலைமையை மாற்றும் டெல்லி கேப்பிடல்ஸ்?

2026 ஐபிஎல் தொடருக்கு டெல்லி கேப்பிடல்ஸ் புதிய கேப்டனை நியமிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2025 சீசனில் அணியின் கேப்டனாக அக்சர் படேல் செயல்பட்டார். முதல் 7 போட்டிகளில் சிறப்பாக ஆடிய டெல்லி அதன் பிறகு சொதப்பி பிளே ஆஃப் வாய்ப்பை தவறவிட்டது. இந்த நிலையில் 2026 சீசனுக்கு புதிய கேப்டன் நியமிக்கப்படவுள்ளார். அக்சர் படேல் அணியில் வீரராக மட்டுமே தொடர்வார் என தெரிகிறது. யார் அந்த புதிய கேப்டன்?
News August 31, 2025
போர்க்கால நடவடிக்கை எடுங்கள்: விஜய்

அமெரிக்காவின் 50% வரிவிதிப்பால் ஏற்படும் பொருளாதார பாதிப்பில் இருந்து மீள போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு விஜய் வலியுறுத்தியுள்ளார். தமிழக ஏற்றுமதியாளர்கள் மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரோடும் தவெக துணை நிற்கும் எனத் தெரிவித்துள்ளார். ஏற்றுமதி சார்ந்த தொழில்களை மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News August 31, 2025
பிரபல நடிகை பிரியா காலமானார்

மராத்தி, ஹிந்தி சீரியல்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை பிரியா மராத்தே(38) மும்பையில் இன்று காலமானார். கேன்சருக்கு சிகிச்சை பெற்ற அவர், இளவயதில் உயிரிழந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. Kasamh Se, Ya Sukhano ya, Char Divas Sasuche உள்ளிட்ட சீரியல்கள் மூலம் மகாராஷ்டிராவின் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான பிரியாவின் மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP