News November 25, 2024
ஆட்டம் காட்டியவர் அவுட்

களத்தில் காலூன்றி நின்று இந்திய அணிக்கு தண்ணி காட்டி வந்த ஆஸ்திரேலிய வீரர் ட்ராவிஸ் ஹெட் 89 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். BGT தொடரின் முதல் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கும் நிலையில் ஹெட் நிலையாக விளையாடி வந்தார். ஆனால், கேப்டன் பும்ராவின் சூறாவளி பந்து ஹெட்டின் பேட்டில் பட்டு பண்ட்டின் கைகளுக்குள் தஞ்சம் புகுந்தது. 11.15 நிலவரப்படி ஆஸி. 161/6.
Similar News
News November 26, 2025
சார்லஸ் டார்வின் பொன்மொழிகள்

*ஒரு மணிநேரத்தை வீணடிக்க துணிந்த ஒருவன், வாழ்க்கையின் மதிப்பை அறியாதவன்.
*ஒரு மனிதனின் நட்பு, அவனது மதிப்புக்குரிய சிறந்த செயல்பாடுகளில் ஒன்றாகும்.
*ஒரு மொழி என்பது ஒரு உயிரினத்தை போன்றது, அழிந்துபோனால் ஒருபோதும் மீண்டும் தோன்றாது.
*எல்லா உயிரினங்கள் மீதும் அன்பு செலுத்துவதே மனிதனின் மிக உயர்ந்த பண்பு.
News November 26, 2025
ஜார்ஜ் கோட்டையே இலக்கு: தமிழிசை

நாளை, செங்கோட்டையன் தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், இது குறித்து தமிழிசையிடம் கேட்கப்பட்டது. அதற்கு, செங்கோட்டையன் என்ன செய்கிறார் என்பது எங்கள் இலக்கு அல்ல என்ற அவர், ஜார்ஜ் கோட்டையை பிடிப்பதே எங்கள் இலக்கு என்றும் நம்பிக்கை தெரிவித்தார். ஏற்கெனவே தவெகவில் இணையவுள்ள தகவலுக்கு KAS, OPS மறுக்காத நிலையில், தமிழிசையின் இந்த பேச்சும் அதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
News November 26, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பொச்சாவாமை ▶குறள் எண்: 531 ▶குறள்: இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு. ▶பொருள்: மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்கால் வரும் மறதி, அளவு கடந்த கோபத்தைக் காட்டிலும் கொடுமையானது.


