News March 30, 2024

‘FAN WAR’ நிலை அருவருப்பாக உள்ளது

image

இந்தியாவில் ‘FAN WAR’ நிலை மிகவும் அருவருப்பாக உள்ளதாக அஷ்வின் தெரிவித்துள்ளார். ரோகித்-ஹர்திக் பாண்டியா ரசிகர்களின் மோதலை சுட்டிக்காட்டியுள்ள அவர், இங்கிலாந்து அணி வீரர்களின் ரசிகர்கள் சண்டை போட்டு நான் பார்த்ததில்லை எனக் கூறியுள்ளார். மேலும், கங்குலி கேப்டன்சியில் சச்சின், டிராவிட் கேப்டன்சியில் கங்குலி, சச்சின் மற்றும் தோனி கேப்டன்சியில் அனைத்து ஜாம்பவான்களும் விளையாடவில்லையா என வினவியுள்ளார்.

Similar News

News November 16, 2025

நகை கடன்.. வந்தது முக்கிய அறிவிப்பு

image

அடகு கடை வணிகர்கள், தனியார் நிதிநிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களின் நகைகளுக்கு அதிக வட்டி(30% வரை) பெற்றுக் கொண்டு, அதே நகைகளை வங்கிகளில் குறைந்த வட்டிக்கு(8-17%) கடன் பெற்று பயனடைந்து வந்தனர். மறு அடகு என அழைக்கப்படும் இந்த நடைமுறையை ரிசர்வ் வங்கி நிறுத்தியுள்ளது. நகைகளின் உண்மையான உரிமையாளர்களை அறிந்து நகை கடன் வழங்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் வங்கியை நாடுவதே சிறந்தது.

News November 16, 2025

டிகிரி போதும்.. 1,353 பணியிடங்கள்: APPLY

image

AIIMS ஹாஸ்பிடலில் காலியாகவுள்ள உதவி நிர்வாக அதிகாரி, எழுத்தர், உதவியாளர் உள்ளிட்ட 1,353 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: 10th, 12th, டிகிரி, Engineering (பதவிகளுக்கேற்ப). சம்பளம்: ₹18,000 – ₹1,51,100 பணிகளுக்கேற்ப வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.2. தேர்வு நாள்: டிச.22 – 24. இதற்கு விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும். Share it.

News November 16, 2025

கம்பீரை வறுத்தெடுக்கும் இந்திய ரசிகர்கள்

image

சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தில் ஒரு பேட்ஸ்மேன் குறைவாக இந்திய அணி ஆடியது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. பேட்டிங்கில் வாஷிங்டன் சுந்தர் நன்றாக ஆடினாலும் குல்தீப், ஜடேஜா, அக்‌ஷர் இருக்கையில் அவர் 4-வது சுழற்பந்து வீச்சாளராக ஆட காரணம் என்னவென்று ரசிகர்கள் கேட்கின்றனர். மேலும், ஒன் டவுனில் விளையாடி வந்த சாய் சுதர்சனை நீக்கியதன் காரணத்தையும் கம்பீர் தெளிவுபடுத்த வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!