News December 9, 2024
அசாத்களின் வீழ்ச்சி.. முடிவுக்கு வந்தது குடும்ப ஆட்சி 2/3

ஷியா பிரிவைச் சேர்ந்த இவர்கள், அங்கு 90% இருந்த சன்னி பிரிவினர் மீது ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அரசின் அனைத்து உயர் மட்டங்களிலும் சன்னி மக்கள் அகற்றப்பட்டு, ஷியா மக்கள் அமர்த்தப்பட்டனர். இந்த 56 ஆண்டுகளில் அங்கு சரியான மருத்துவம் கிடைக்காதது, வேலைவாய்ப்பின்மை என மூன்றாம் தர நாடாக சிரியா மாறியது. இதனை எதிர்த்து தொடங்கிய உள்நாட்டு போரில், இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
Similar News
News August 26, 2025
திமுக அமைச்சருக்கு என்னாச்சு? ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சை

உடல் நலக்குறைவால் <<17522156>>அமைச்சர் ஐ.பெரியசாமி<<>>, மதுரை மீனாட்சி மிஷன் ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதன் காரணமாக அவர் சிகிச்சை பெற்று வருவதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு டாக்டர்கள் குழு, சிகிச்சை அளித்து வருகின்றனர். விரைவில் அவர் வீடு திரும்புவார் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News August 26, 2025
தோனியால் கிரிக்கெட் வாழ்க்கையே போச்சு: திவாரி

தன்னை தோனிக்கு பிடிக்காததால் தான், தனது கிரிக்கெட் கெரியர் முடிவுக்கு வந்ததாக இந்திய முன்னாள் வீரர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார். தோனி அவருக்கு பிடித்த வீரர்களுக்கு மட்டுமே தொடர்ந்து வாய்ப்பளித்ததாகவும், தன்னை புறக்கணித்ததற்கான காரணம் இதுவரை தனக்கு தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதுவரை 12 ODI போட்டிகளில் விளையாடியுள்ள திவாரி 1 சதம், 1 அரைசதம் என 287 ரன்களை எடுத்துள்ளார்.
News August 26, 2025
மாணவர்களுக்கு தினமும் முருங்கை இலை பொடி தாங்க!

பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை WHO முன்னாள் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் பாராட்டியுள்ளார். வயிறு நிறைய சாப்பிட்டு படிக்க உட்கார்ந்தா மாணவர்களுக்கு படிப்பு நல்லா வரும் எனக் கூறிய அவர், மாணவர்களுக்கான உணவில் தினமும் ஒரு ஸ்பூன் முருங்கை இலைப் பொடியை சேர்க்க வேண்டுமெனவும் இதன் மூலம் ரத்த சோகையை தடுக்க முடியும் எனவும் CM ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.