News June 27, 2024

எதிர்பார்த்தது நடக்கவில்லை: ரஷீத் கான்

image

தென்னாப்பிரிக்கா அணியுடனான தோல்வி, இன்றைய நாளை மிகவும் கடினமாக மாற்றியுள்ளதாக ஆஃப்கன் அணியின் கேப்டன் ரஷீத் கான் தெரிவித்துள்ளார். இன்றைய ஆட்டத்தில் இதைவிட சிறப்பான ஆட்டத்தை எங்களால் வெளிப்படுத்தியிருக்க முடியும் என்ற அவர், தென்னாப்பிரிக்க பவுலர்களின் பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருந்ததாகவும் பாராட்டினார். இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் 56 ரன்னில் ஆஃப்கன் அணி சுருண்டது.

Similar News

News December 14, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: செங்கோன்மை ▶குறள் எண்: 549 ▶குறள்: குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.
▶பொருள்: குடிமக்களைப் பாதுகாத்துத் துணை நிற்பதும், குற்றம் செய்தவர்கள் யாராயினும் தனக்கு இழுக்கு வரும் என்று கருதாமல் தண்டிப்பதும் அரசின் கடமையாகும்.

News December 14, 2025

50% ஊழியர்களுடன் மட்டும் செயல்பட அனுமதி: டெல்லி அரசு

image

காற்றுமாசால் <<18550190>>திணறி வரும் டெல்லியில்,<<>> பள்ளிகள் மற்றும் அனைத்து நிறுவனங்களுக்கும் முக்கிய அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளிகளில் 1 முதல் 9-ம் மாணவர்களுக்கு, நேரடி மற்றும் ஆன்லைன் வகுப்புகளை கலந்து நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 50% ஊழியர்கள் WFH செய்யவும் அறிவுறுத்தியுள்ளது. மறுஅறிவிப்பு வரும் வரை இது தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 14, 2025

CINEMA 360°: சைலண்டாக முடிந்த அசோக் செல்வன் படம்

image

*விமல் நடிக்கும் ‘வடம்’ படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று காலை 11.11 மணிக்கு சசிக்குமார் வெளியிடுகிறார். *பவன் கல்யாணின் ‘உஸ்தாத் பகத் சிங்’ படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி உள்ளது. *அசோக் செல்வன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. *சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தின் 3-வது பாடலான ‘ரத்னமாலா’ இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.

error: Content is protected !!