News April 15, 2024

அமலாக்கத்துறை சிறப்பாக பணியாற்றுகிறது

image

அமலாக்கத்துறை சிறப்பாக பணியாற்றுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ANI ஊடகத்திற்கு பேட்டி அளித்த அவர், எதிர்க்கட்சி தலைவர்களை பாஜக சிறைக்கு அனுப்புவதாகக் கூறப்படுவதை மறுத்தார். நேர்மையானவர்கள் பயப்படத் தேவையில்லை. நான் முதலமைச்சராக இருந்தபோது எனது உள்துறை அமைச்சரை சிறைக்கு அனுப்பினார்கள். அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்குகளில் 3% மட்டுமே அரசியல்வாதிகள் மீதான வழக்குகள் என்றார்.

Similar News

News November 26, 2025

தமிழகம், கேரளாவுக்கு பட்டை நாமம்: சு.வெங்கடேசன்

image

2024-25-ம் ஆண்டில் புதிய ரயில்வே வழித்தடத்திற்கு ₹31,458 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் தெற்கு ரயில்வேக்கு வெறும் 301 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக MP சு.வெங்கடேசன் சாடியுள்ளார். மொத்த தொகையில் 1%-ஐ மட்டுமே ஒதுக்கிவிட்டு, தமிழகம், கேரளாவுக்கு மத்திய அரசு பட்டை நாமம் போட்டு விட்டதாகவும் விமர்சித்துள்ளார். ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களுக்கு பல்லாயிரம் கோடி ஒதுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

News November 26, 2025

இன்று மதியம் புயல் உருவாகிறது

image

மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, இன்று (நவ.26) மதியம் புயலாக தீவிரமடையும் என IMD கணித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, 12 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, 24 மணிநேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. எனவே, தென் & வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

News November 26, 2025

நவம்பர் 26: வரலாற்றில் இன்று

image

*அரசியல் சாசன தினம்.
*1949 – அம்பேத்கர் சமர்ப்பித்த இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் ஏற்றுக்கொண்டது.
*1954 – விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்தநாள்.
*1957 – சாதியை பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளை தீயிடும் போராட்டத்தை பெரியார் தொடங்கி வைத்தார். *2008 – மும்பை தீவிரவாத தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர்.

error: Content is protected !!