News May 1, 2024
தேர்தல் ஆணையம் மக்களை தண்டிக்கிறது

மக்கள் பிரதிநிதிகளுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் தேர்தல் ஆணையத்தால் தண்டனை தான் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தமிழகத்தில் தேர்தல் முடிந்துவிட்டதால் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தேர்தல் ஆணையம் தளர்வு அளித்திருக்கலாம் எனவும், ஆனால், கோடை காலத்தில் தண்ணீர் பந்தல் அமைப்பதற்குக் கூட அனுமதியளிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 23, 2025
இலங்கை முன்னாள் அதிபர் ஹாஸ்பிடலில் அட்மிட்

முன்னாள் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரசு நிதியை சொந்த காரணங்களுக்காக பயன்படுத்திய வழக்கில் ரணில் நேற்று கைது செய்யப்பட்டார். ஆக.26 வரை ரிமாண்டில் வைக்கப்பட்ட நிலையில், அவருக்கு BP, சர்க்கரை அதிகரித்து திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தற்போது கொழும்பில் உள்ள நேஷனல் ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
News August 23, 2025
ராகுல் தான் நாளைய PM: செல்வப்பெருந்தகை பதிலடி

நெல்லை பாஜக பூத் கமிட்டி மாநாட்டில், ராகுல் ஒருபோதும் பிரதமராக முடியாது என அமித் ஷா கூறியிருந்தார். இதற்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். அமித்ஷாவின் கருத்து மக்களின் விருப்பத்தையும், ஜனநாயகத்தின் அடிப்படையையும் அவமதிக்கும் வகையில் இருப்பதாக கூறிய அவர், இம்மாதிரியான கருத்துக்கள் ஆளும் கட்சியின் தோல்வி பயத்தை வெளிப்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.
News August 23, 2025
அட்லி-அல்லு அர்ஜுன் படம்.. Escape Mode-ல் தீபிகா?

அல்லு அர்ஜுனை வைத்து அட்லி இயக்கும் படத்தின் ஷூட்டிங், கதை விவாதம் என்ற பெயரில் ஒத்திவைக்கப்பட்டுக்கொண்டே போகிறதாம். ஃப்ளாப் பட்டியலில் தானும் சேரக்கூடாது என்பதற்காக அலர்ட் மோடில் இருக்கும் அட்லி, கதை விவாதக் குழுக்களை உருவாக்கி ஒவ்வொரு விவாதத்திற்கும் ஆஜராகிவருகிறாராம். ஏற்கெனவே கொடுத்த தேதிகளில் ஷூட்டிங் வைக்காததால், ‘எஸ்கேப் ஆகிவிடலாமா’ என்று தீபிகா படுகோன் யோசிப்பதாக கூறப்படுகிறது.