News May 17, 2024
ஆந்திராவில் அதிகாரிகளை இடமாற்றிய தேர்தல் ஆணையம்

திருப்பதியில் ஓட்டு எண்ணும் மையத்தில் நடந்த வன்முறை சம்பவம் குறித்து எஸ்ஐடி விசாரிக்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 2 எஸ்.பி.,க்கள், மாவட்ட ஆட்சியர் ஆகிய மூவரை பணியிட மாற்றம் செய்த தேர்தல் ஆணையம், அத்துடன் 2 எஸ்.பி.,க்களையும் சஸ்பெண்ட் செய்துள்ளது. ஆந்திராவில் நடந்த வன்முறைகள் குறித்து இரண்டு நாள்களில் எஸ்ஐடி அறிக்கை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News November 28, 2025
நவம்பர் 28: வரலாற்றில் இன்று

*1890 – ஜோதிராவ் புலே நினைவுநாள்.
*1893 – நியூசிலாந்தில் முதல்முறையாக பெண்கள் வாக்களித்தனர்.
*1927 – மூத்த அரசியல்வாதி HV ஹண்டே பிறந்தநாள்.
*1964 – நாசா செவ்வாய் கோளை நோக்கி மரைனர் 4 விண்கலத்தை ஏவியது.
*1972 – பாரிஸ் நகரில் கடைசி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
News November 28, 2025
தவெகவில் செங்கோட்டையன்: ரஜினி ரியாக்ஷன்

தவெகவில் செங்கோட்டையன் இணைந்தது குறித்த கேள்விக்கு ‘நோ கமெண்ட்ஸ்’ என ரஜினிகாந்த் பதிலளித்துள்ளார். அதேநேரம், உதயநிதி ஸ்டாலினுக்கு அவர் பிறந்தநாள் வாழ்த்துகளை கூறினார். ஏற்கெனவே, அரசியல் குறித்த கேள்விகளை கேட்க வேண்டாம் என்று ரஜினி கூறி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், ‘ஜெயிலர் 2’ ஷூட்டிங் நன்றாக போய்க் கொண்டிருப்பதாகவும், ரசிகர்களின் ஆசியுடன் தான் சூப்பர் ஸ்டாராகவே உள்ளேன் என்றும் கூறினார்.
News November 28, 2025
அதிகளவில் சைக்கிள் பயன்படுத்தும் நாடுகள்

சில நாடுகளில், பைக்குகள், கார்களை விட அதிகளவில் சைக்கிள்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நாடுகளில் மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கின்றனர். குறிப்பாக, நெதர்லாந்து நாட்டில், மக்கள்தொகையை விட அதிக சைக்கிள்கள் உள்ளன. இதுபோன்று, எந்தெந்த நாடுகளில் சைக்கிள் பயன்படுத்தும் சதவீதம் அதிகமாக உள்ளது என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


