News March 19, 2025
பூமி உங்களை பிரிந்து வாடியது சுனிதா: மோடி

விடாமுயற்சி என்றால் என்ன என்று சுனிதா வில்லியம்ஸ் மற்றும் Crew9 விண்வெளி வீரர்கள் உலகிற்கு காட்டிவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அவர்களுடைய இந்த உறுதிப்பாடு லட்சக்கணக்கானோருக்கு ஊக்கமளிக்கும் எனவும், தொழில்நுட்பமும் விடாமுயற்சியும் சேரும் போது என்ன நடக்கும் என அவர்கள் நிரூபித்துவிட்டதாகவும் பிரதமர் பாராட்டியுள்ளார். மேலும், அவர்களை பிரிந்து வாடிய பூமிக்கு நல்வரவு எனவும் வாழ்த்தியுள்ளார்.
Similar News
News September 19, 2025
‘ஜனநாயகன்’ அப்டேட் கொடுத்த ஹெச்.வினோத்

விஜய்யின் ‘ஜனநாயகன்’ குறித்து ரசிகர்களுக்கு ஹெச்.வினோத் புதிய அப்டேட் கொடுத்துள்ளார். ‘ஜனநாயகன்’ விஜய் சாருக்கான பக்கா ஃபேர்வல் படமாக அமையும் என்றும் படத்தில் மாஸ், கமர்ஷியல், ஆக்ஷன் ஆகியவற்றை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் எனவும் அவர் கூறினார். மேலும், பொங்கலுக்கு வெளியாகும் இப்படம் கம்ப்ளீட் மீல்ஸாக இருக்கும் என்று வினோத் தெரிவித்துள்ளார். யாரெல்லாம் ஜனநாயகனுக்கு ஆவலோடு வெயிட்டிங்?
News September 19, 2025
பும்ரா இல்லை.. இது தான் இந்தியாவின் பிளேயிங் 11

ஆசிய கோப்பையில் ஓமனுக்கு எதிரான போட்டியில் பும்ரா, வருண் சக்கரவர்த்திக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இன்றைய போட்டியின் இந்திய பிளேயிங் 11 விவரம் : சூர்யகுமார் யாதவ், அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சஞ்சு சாம்சன், அக்சர் படேல், ஹர்திக் பாண்ட்யா, திலக் வர்மா, ஷிவம் துபே, குல்தீப் யாதவ், ராணா, அர்ஷ்தீப் சிங். இது இந்திய அணிக்கு 250-வது டி20 போட்டியாகும்.
News September 19, 2025
விஜய் பரப்புரையில் மின்தடை ஏற்படாது!

நாகை, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் விஜய் நாளை பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். முன்னதாக, திருவாரூரில் நாளை மாதாந்தர பராமரிப்பு பணிக்காக மின்தடை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அதனை ஒத்திவைப்பதாகவும் நாளை தடையற்ற மின்சாரம் கிடைக்கும் என்றும் மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. கடந்த முறை அரியலூரில் விஜய் பரப்புரை மேற்கொண்டபோது மின்தடை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.