News March 17, 2025
த்ரில்லர் படம் இயக்குவதே கனவு.. பிரபல நடிகையின் ஆசை

சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழில் பிரபலமானவர் மஞ்சிமா மோகன். தற்போது OTT-யில் வெளியாகியுள்ள சுழல் வெப் தொடரின் 2ஆம் பாகத்தில் இவர் நடித்துள்ளார். இதனிடையே பேட்டி ஒன்றில் தனக்கு த்ரில்லர் படம் இயக்க ஆசை எனத் தெரிவித்துள்ளார். தன்னால் திரைக்கதை எழுத முடியாவிட்டாலும், எழுத்தாளர் எழுதும் கதையைத் திரையில் கொண்டு வர முடியும் எனக் கூறியுள்ளார்.
Similar News
News March 17, 2025
சென்னை டூ நாகை: இது பக்கம் போயிறாதீங்க மக்களே

சென்னையில் இருந்து நாகை வரையிலான கடற்பகுதிகள் இன்று கொந்தளிப்புடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தக் கடற்பகுதிகளில் 8 முதல் 12 அடி வரை அலைகள் மேலெழும்பும் என்பதால், பொதுமக்கள் கடல் அருகே செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். ஏதாவது ஒரு கடற்பகுதி கொந்தளிப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், கிட்டத்தட்ட மாநிலத்தின் பாதி கடற்கரை பகுதிகளில் இந்நிலை என்பது விசித்திரமாக உள்ளது.
News March 17, 2025
முடிவுக்கு வருமா ரஷ்யா – உக்ரைன் போர்? – ட்ரம்ப் சூசகம்!

ரஷ்யா – உக்ரைன் இடையே 3 ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. போரை நிறுத்துவதற்கான முயற்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புடினுடன் அவர் நாளை பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகத் தெரிவித்துள்ளார். போரை தங்களால் நிறுத்த முடியலாம், (அ) நிறுத்த முடியாமலும் போகலாம். ஆனால், நல்ல வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன் என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
News March 17, 2025
‘வீர தீர சூரன்’ ட்ரெய்லர் எப்போது?

விக்ரமின் 62 படமான ‘வீர தீர சூரன்’ படத்தை சித்தா பட இயக்குநர் அருண்குமார் இயக்கியுள்ளார். மார்ச் 27ஆம் தேதி படம் வெளியாக உள்ளதால், ட்ரெய்லர் வெளியீடு குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில்
‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா வரும் 20ஆம் தேதி மாலை 7 மணிக்கு ஆவடி வேல் டெக் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளது.