News March 22, 2024
பயந்த சர்வாதிகாரி ஜனநாயகத்தை கொல்ல முயற்சி

கெஜ்ரிவால் கைதுக்கு INDIA உரிய பதிலடி கொடுக்குமென காங்கிரஸ் எம்.பி ராகுல் தெரிவித்துள்ளார். டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதுக்கு கண்டனம் தெரிவித்து அவர் தனது தனது X பக்கத்தில், ‘ஒரு பயந்த சர்வாதிகாரி ஜனநாயகத்தை கொல்ல விரும்புகிறார். ஊடகங்களை கைப்பற்றி, கட்சிகளை உடைத்து, நிறுவனங்களிடம் பணம் பறித்து, எதிர்க்கட்சியின் கணக்கை முடக்குவதோடு, முதல்வர்களை கைது செய்வது வாடிக்கையாகி விட்டார்’ என்றார்.
Similar News
News April 27, 2025
தள்ளிப்போகிறதா CUET UG 2024 தேர்வு?

மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கான CUET UG நுழைவுத் தேர்வின் 2025-ம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் மார்ச் 24-ம் தேதி வரை பெறப்பட்டது. இதற்கான தேர்வு உத்தேசமாக மே 8 முதல் ஜூன் 1-க்குள் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், இந்த தேர்விற்கான அட்டவணை தற்போது வரை வெளியாகவில்லை. அதேநேரம், மே 4-ம் தேதி நீட் தேர்வு நடைபெறவுள்ளதால், CUET தேர்வு மேலும் தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News April 27, 2025
ரத்தம் கொதிக்கிறது: PM மோடி

பஹல்காம் தாக்குதலை கண்டு இந்தியர்களின் ரத்தம் கொதிக்கிறது என்றும், ஒவ்வொரு இந்தியரின் இதயமும் நொறுங்கிவிட்டதாகவும் மான் கி பாத் உரையில் PM மோடி உணர்ச்சிபொங்க கூறியுள்ளார். தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களின் கோழைத்தனத்தையே இந்த தாக்குதல் பிரதிபலிப்பதாகவும் மோடி குறிப்பிட்டார். காஷ்மீரில் அமைதி திரும்பிய நேரத்தில், மீண்டும் அதனை அழிக்க வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர் என்றும் குற்றஞ்சாட்டினார்.
News April 27, 2025
மீண்டும் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட பாகிஸ்தான்!

கடந்த 2 நாள்களாக Loc-யில் பாகிஸ்தான் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றது. நேற்றும் நள்ளிரவில், டுட்மரி கலி (tutmari gali) மற்றும் ராம்பூர் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இந்திய ராணுவம் கூறியுள்ளது. மேலும், பாகிஸ்தான் ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டை இந்திய ராணுவம் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுத்ததாகவும்.