News October 2, 2025
இப்பதான் டவுட் அதிகமாகுது: அண்ணாமலை

கரூர் உயிரிழப்புகள் பற்றி செந்தில் பாலாஜி பிரஸ்மீட் கொடுத்தது மேலும் சந்தேகத்தை அதிகரிப்பதாக அண்ணாமலை கூறியுள்ளார். வேலுசாமிபுரம், கூட்டம் நடைபெறத் தகுதியான இடமா என்பதை விசாரிக்க, திமுக அரசே ஒரு ஆணையம் அமைத்துள்ள நிலையில், அதைக் குறித்து செந்தில் பாலாஜி பேச வேண்டிய அவசியம் என்னவென்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் செந்தில் பாலாஜி கருத்து திணிப்பு செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.
Similar News
News October 2, 2025
DMK ஆட்சியில் 217 குழந்தைகள் படுகொலை: அன்புமணி

திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61% அதிகரித்துள்ளதாக அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். திமுக ஆட்சியில் மட்டும் 217 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 7 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டை குழந்தைகள் பாதுகாப்பாக வாழ்வதற்கு தகுதியற்ற மாநிலமாக மாற்றியது தான் திமுக அரசின் சாதனை எனவும் விமர்சித்துள்ளார்.
News October 2, 2025
தமிழகம் முழுவதும் இன்று மூடல்..

டாஸ்மாக் கடைகள் வழக்கமாக நண்பகல் 12 மணிக்கு திறக்கப்படும். ஆனால், இன்று காந்தி ஜெயந்தி என்பதால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி, சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டால், கடுமையான நடவடிக்கை பாயும். பார் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
News October 2, 2025
Cinema Roundup: SK ஜோடியாக நடிக்கும் ரஷ்மிகா மந்தனா

*’மூக்குத்தி அம்மன் 2′ படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று காலை 10.05 மணிக்கு வெளியாகிறது. *சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ஹீரோயினாக ரஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். *விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது. *ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா 2’ படத்தில் சிம்புவை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.