News March 21, 2025

மார்ச் 28இல் ‘தி டோர்’ ரிலீஸ்

image

பாவனா நடித்துள்ள ‘தி டோர்’ திரைப்படம், மார்ச் 28ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஜெய் தீவ் இயக்கும் இந்தப் படத்தை ஜூன் ட்ரீம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் நவீன் ராஜா தயாரித்துள்ளார். மிஸ்ட்ரி திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பான் இந்தியா அளவில் ரிலீஸாகிறது. சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய WAY2NEWS APPஐ ஃபாலோ பண்ணுங்க.

Similar News

News July 8, 2025

போலி லிங்க்..! க்ளிக் செய்தால் பணம் காலி: போலீஸ்

image

போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக அபராதம் வசூலிப்பதிலும் மோசடி கும்பல் கைவரிசை காட்ட தொடங்கியிருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர். பொதுவாக அபராத விவரம் வாட்ஸ் அப் அல்லது SMS வழியாக வரும். நம் பணத்தை அதிகாரப்பூர்வ ஆப்-களில் செலுத்துவோம். ஆனால் மோசடி கும்பல் பணத்தை செலுத்த APK அப்ளிகேஷன் லிங்கை அனுப்புவார்கள். அதனை க்ளிக் செய்தால் அடுத்தடுத்த கட்டங்களில் பணத்தை இழப்போம் என எச்சரிகின்றனர்.

News July 8, 2025

திருச்செந்தூருக்கு 5 லட்சம் பக்தர்கள் வருகை: சேகர் பாபு

image

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. நிகழ்வுக்கு பின் பேட்டியளித்த அமைச்சர் சேகர்பாபு, சுமார் 5 லட்சம் பக்தர்கள் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவிலுக்கு வருகை தந்ததாகவும், பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் கூறினார். திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா என்பது பக்தர்கள் மாநாடு, பா.ஜ.க.வினரின் மாநாடு அல்ல என்றார்.

News July 8, 2025

அரசு கல்லூரிகளில் 20% கூடுதல் மாணவர் சேர்க்கை: அமைச்சர்

image

அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 20 சதவிகிதம் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். உயர்கல்வியில் சேர திரளான மாணவர்கள் காத்திருக்கிறார்கள் என அறிந்த CM ஸ்டாலின், அரசு உதவி பெறும் கலை & அறிவியல் கல்லூரிகளில் 15 சதவிகிதமும், சுயநிலை கலை & அறிவியல் கல்லூரிகளில் 10 சதவிகிதமும் கூடுதலாக உயர்த்த உத்தரவிட்டிருக்கிறார் என கோவி.செழியன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!