News August 4, 2024
அடுத்தடுத்து சிக்கும் திமுகவினர்

புதுக்கோட்டையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சுந்தரபாண்டியன் மீது புகார் எழுந்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக அவரது கார் டிரைவர் கைது செய்யப்பட்ட நிலையில், சுந்தரபாண்டியன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஏற்கெனவே, திமுகவைச்சேர்ந்த ஜாபர் சாதிக், ராமநாதபுரம் இப்ராஹிம் உள்ளிட்டோர் போதைப்பொருள் வழக்கில் சிக்கி கைதாகியிருப்பது, குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 19, 2025
2026 தேர்தலில் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை: திருமாவளவன்

தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட காலமாக திருமாவளவன் வலியுறுத்தி வருகிறார். ஆனால் 2026 தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை விசிக திமுகவிடம் வைக்கவில்லை என அவர் இப்போது கூறியுள்ளார். அதேசமயத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கொள்கையை நாங்கள் கைவிடவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
News November 19, 2025
விவசாயிகளுக்கு ₹18,000 கோடி நிதி வழக்கும் PM மோடி

கோவை கொடிசியா வளாகத்தில் இன்று நடைபெறும் வேளான் மாநாட்டை PM மோடி தொடங்கி வைக்கிறார். தொடந்து பி.எம். கிசான் திட்டத்தின், 21-வது தவணையான ₹18,000 கோடி உதவித்தொகையை 9 கோடி விவசாயிகளுக்கு வழங்குகிறார். இந்த திட்டத்தில் தமிழகத்தில் மட்டும் 21,80,204 விவசாயிகள் பயன்பெறுகின்றனர். மேலும், இயற்கை விவசாயத்தில் சாதனை படைத்த விவசாயிகளுக்கு PM மோடி விருது வழங்கி கௌரவிக்கிறார்.
News November 19, 2025
இ பாஸ்போர்ட் வாங்க ரெடியா?

புதிய அம்சங்களுடன் சிப் பதிக்கப்பட்ட மின்னணு பாஸ்போர்ட் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதில் ஆர்எப்ஐடி எனப்படும் ரேடியோ அலை அடையாள சிப் மற்றும் ஆன்டனா பொருத்தப்பட்டிருக்கும். இது உங்கள் பயோமெட்ரிக் மற்றும் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும். 2035-க்குள் நாட்டிலுள்ள அனைத்து பாஸ்போர்ட்டுகளையும் மின்னணு முறைக்கு மாற்ற அரசு இலக்கு வைத்துள்ளது.


