News April 16, 2024

இந்த நோய்க்கு, ஆண்களை விட பெண்களே அதிகம் உயிரிழப்பு

image

தமிழகத்தில் சர்க்கரை நோய்க்கு, ஆண்களை விட பெண்களே அதிகம் உயிரிழந்திருப்பது பொது சுகாதார இயக்குநரக ஆய்வில் தெரிய வந்துள்ளது. 2015இல் பலியான ஆண்களின் சராசரி விகிதம் 3.4%ஆகவும், பெண்களின் விகிதம் 5%ஆகவும், 2021இல் ஆண்களின் விகிதம் 4%ஆகவும், பெண்களின் விகிதம் 4.3%ஆகவும் இருப்பது ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. சுகாதார விழிப்புணர்வு, பெண்களுக்கு குறைவாக இருப்பதே காரணமாக கூறப்படுகிறது.

Similar News

News December 5, 2025

பிரித்து ஆளும் கொள்கை உடைய திமுக: தமிழிசை

image

தமிழ் வேறு இந்து மதம் வேறு என்று கூறிய சட்ட அமைச்சர் ரகுபதிக்கு தமிழிசை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அண்ணா வளர்த்தது தமிழ் அல்ல ஆண்டாள் வளர்த்தது தான் தமிழ் என்றும், தமிழையும் இந்து மதத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், திமுக அரசின் பிரித்தாலும் கொள்கையை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று X-ல் தமிழிசை பதிவிட்டுள்ளார்.

News December 5, 2025

பாலைய்யா ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி

image

இன்று வெளியாகவிருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2 தாண்டவம்’ தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தை ரிலீஸ் செய்யமுடியவில்லை என்றும், இது தங்களுக்கு மிகவும் கடினமான தருணம் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் பாலைய்யா ரசிகர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். முன்னதாக தொழில்நுட்ப பிரச்னையால் ‘அகண்டா 2’ பிரீமியர் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News December 5, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶டிசம்பர் 5, கார்த்திகை 19 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4.45 PM – 5.45 PM ▶கெளரி நல்ல நேரம்: 12.15 AM – 1:15 AM & 6.30 PM – 7.30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 AM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: பிரதமை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்

error: Content is protected !!