News October 18, 2024
விஜய் படத்திற்கு NO சொன்ன இயக்குநர்

‘நாளைய தீர்ப்பு’ படத்தின் மூலம் நடிகர் விஜய்யை அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அறிமுகப்படுத்தினார். ஆனால், அதற்கு முன்னதாக மற்ற இயக்குநர்களின் படத்தில் விஜய்யை அறிமுகப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அந்த வகையில், ‘சேதுபதி ஐபிஎஸ்’, ‘மன்னன்’, ‘சந்திரமுகி’ படங்களின் இயக்குநர் பி.வாசுவையும் சந்திரசேகர் அணுகியுள்ளார். ஆனால், சில காரணங்களால் விஜய்யின் முதல் படத்தை இயக்க அவர் மறுத்துவிட்டார்.
Similar News
News July 4, 2025
FLASH: தூத்துக்குடியில் 7-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி வரும் திங்கள்கிழமை(ஜூலை 7) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அந்த மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் இயங்காது. குடமுழுக்கு விழாவையொட்டி மாநிலம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் TNSTC சிறப்புப் பஸ்களை அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.
News July 4, 2025
வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் குஜராத்

தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரித்து, குஜராத் அரசு சட்டத் திருத்தம் கொண்டுவந்துள்ளது. ஒரு வாரத்திற்கான அதிகபட்ச பணிநேரம் 48 மணி நேரமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. மேலும், பெண்கள் இரவு ஷிஃப்டில் பணியாற்றும் வகையிலும் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அண்மையில், ஆந்திராவில் வேலை நேரத்தை 10 மணிநேரமாக உயர்த்த, அம்மாநில அரசு முடிவெடுத்தது. வேலை நேரத்தை உயர்த்தும் முடிவு சரியா?
News July 4, 2025
சனி வக்ர பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

வரும் ஜூலை 13-ல் மீன ராசிக்கு வக்ர பெயர்ச்சி அடையும் சனி, நவ.28 வரை அதே நிலையில் நீடிப்பார். இதனால் பலன் பெறும் ராசியினர்: *மிதுனம்: வாய்ப்புகளும், வருமானமும் அதிகரிக்கும். மன அமைதி கிடைக்கும். தடை நீங்கும் *கன்னி: பணவரவுக்கான புதிய வழிகள் திறக்கும். உறவுகள் மேம்படும். *தனுசு: தொழிலில் முன்னேற்றம், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்கும். நிதிநிலை வலுவாகும். ஆரோக்கியம் மேம்படும்.