News April 25, 2024
மரண ரயில் பாதையின் வதை!

சயாம் – பர்மா மரண ரயில் பாதைக் கட்டுமானத்திற்காக கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் மலேசியா & பர்மா தமிழர்களின் 80ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஐந்தாண்டுகளில் கட்டுமானம் செய்யப்பட வேண்டிய 415 கி.மீ. நீளத்திலான பாதையை குண்டு வீச்சு, காலரா மத்தியில் வெறும் 15 மாதங்களில் கட்டி முடிக்க துப்பாக்கி முனையில் ஜப்பான் ராணுவம் செய்த கொடுமைகளால் உயிரிழந்த அயலகத் தமிழர்களை நினைவில் ஏந்துவோம்.
Similar News
News November 13, 2025
Sports Roundup: வில்வித்தையில் இந்தியாவுக்கு 2 தங்கம்

*கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக ஷேன் வாட்சன் நியமனம். *ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப், மிக்ஸட் காம்பவுண்ட் பிரிவில் இந்தியா தங்கம் வென்றது. *அதே போல, காம்பவுண்ட் மகளிர் அணிகள் பிரிவிலும் இந்தியா தங்கப் பதக்கத்தை வசப்படுத்தியது. *Kumamoto மாஸ்டர்ஸ் லக்ஷயா சென் காலிறுதிக்கு முன்னேற்றம். *வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரை நியூசிலாந்து 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
News November 13, 2025
ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒரு VDK இருந்தால்.. ரஷ்மிகா

விஜய் தேவரகொண்டா (VDK) – ரஷ்மிகா மந்தனாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாக தகவல் வெளியானது. இதனிடையே, நேற்று நடைபெற்ற ‘The Girlfriend’ பட விழாவில், ரஷ்மிகாவின் கையில் VDK முத்தமிட்டதும், இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக ரசிகர்கள் கன்ஃபார்ம் செய்தனர். மேலும் அதே விழாவில் பேசிய ரஷ்மிகா, ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு விஜய் தேவரகொண்டா இருந்தால், அது ஒரு ஆசிர்வாதம் என்றும் கூறியுள்ளார்.
News November 13, 2025
விஜய்யை நாங்கள் கூட்டணிக்கு அழைக்கவில்லை: நயினார்

திமுக, பாஜக உடன் <<18272355>>கூட்டணி இல்லை<<>> என்று சமீபத்தில் விஜய் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தாங்கள் யாரையும் கூட்டணிக்கு அழைக்கவில்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தேர்தலில் நிரந்தர நண்பரும், எதிரியும் இல்லை என்று கூறிய அவர், ஒரு கவுன்சிலர் கூட இல்லாத TVK, இப்படிப்பட்ட பெரிய வார்த்தைகளை பேச வேண்டுமா என்பதை விஜய் தான் முடிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.


