News June 27, 2024
பலி எண்ணிக்கை 64 ஆக உயர்ந்தது

கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் அருந்தி பலியானவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மகேஷ் என்பவர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது வரை 6 பெண்கள் உள்பட 64 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 88 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கள்ளச்சாராயத்திற்கு எதிரான நடவடிக்கையில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
Similar News
News November 27, 2025
செங்கோட்டையனை பாஜக இயக்குகிறதா?

KAS தவெகவுக்கு சென்றதால் அதிமுகவுக்கு பாதிப்பில்லை என நயினார் கூறியுள்ளார். கட்சியிலிருந்து ஒருவர் போனால், அவருடன் சேர்ந்து வாக்குகளும் போய்விடுமா என கேட்ட அவர், அதிமுகவுக்கு தனி வாக்கு வங்கி உள்ளது, மக்கள் ஆதரவும் குறையவில்லை எனவும் உறுதியாக தெரிவித்துள்ளார். மேலும், KAS-ஐ பாஜக இயக்குவதாக வரும் தகவல்கள் பொய் எனவும், அப்படியெனில் அவர் இங்குதான் வந்திருக்க வேண்டும் என்றும் விளக்கமளித்துள்ளார்.
News November 27, 2025
இவர்தான் #Thalaivar173 டைரக்டரா?

ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் படத்தில் இருந்து சுந்தர்.சி, வெளியேறிவிட்ட நிலையில், அந்த படத்தை யார் இயக்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பல இயக்குநர்களின் பெயர்கள் அடிப்பட்ட நிலையில், தற்போது ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இப்படத்தில் சாய் பல்லவி, கதிர் ஆகியோரும் இணைவார்கள் என்றும் கூறப்படுகிறது.
News November 27, 2025
அதி கனமழை… மக்களே வெளியே வராதீங்க

வங்கக்கடலில் சற்றுநேரத்தில் ‘டிட்வா’ புயல் உருவாகவுள்ளதாக IMD தெரிவித்துள்ளது. இந்த புயல் தமிழகத்தை நோக்கி வரும் நிலையில், நாளை தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும், நாளை மறுநாள் மயிலாடுதுறை, செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களிலும் அதி கனமழை பெய்யக்கூடும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 3 நாள்களுக்கு பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது.


