News March 30, 2025
பலி எண்ணிக்கை 2000ஐ தாண்டியது

மியான்மரை தலைகீழாக புரட்டிப்போட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000ஆக அதிகரித்துள்ளது. கட்டட இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கி இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மேலும், காயமடைந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருவதாகவும், 30 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 1, 2025
மதியம் 1 மணியில் இருந்து digital services இயங்காது

இன்று (ஏப்.1ஆம் தேதி) நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளிலும் நிதியாண்டிற்கான வருடாந்திர வங்கிக் கணக்கு மூடல் இருக்கும். இதன்காரணமாக இன்று மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை digital services செயல்படாது. எனவே, வாடிக்கையாளர்கள் தடையற்ற சேவைகளைப் பெற UPI Lite மற்றும் ATM-களைப் பயன்படுத்த வேண்டும் என்று SBI வங்கி அறிவித்துள்ளது.
News April 1, 2025
‘காவிரி – வைகை – குண்டாறு’ எங்கள் பிள்ளை: துரைமுருகன்

காவிரி – வைகை – குண்டாறு திட்டம் நாங்கள் பெற்ற பிள்ளை அதனை ஒருபோதும் கைவிட மாட்டோம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். பேரவையில், MLA சி.விஜயபாஸ்கர் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பேசிய அவர், இத்திட்டத்திற்காக இதுவரை ₹288 கோடி செலவிடப்பட்டுள்ளதாக கூறினார். 2008இல் கருணாநிதி முன்மொழிந்த இத்திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் விரைந்து முடிப்போம் என்றும் உறுதி அளித்துள்ளார்.
News April 1, 2025
ரேப் அல்ல… இயக்குநர் கைதான வழக்கில் திடீர் ட்விஸ்ட்

கும்பமேளாவில் புகழ்பெற்ற மோனலிசாவுக்கு பட வாய்ப்பளித்த <<15947316>>சனோஜ் மிஸ்ரா<<>> பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே. இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என, புகாரளித்த இளம்பெண் தெரிவித்துள்ளார். சனோஜ் மிஸ்ராவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்ட அவர், பாலியல் வன்கொடுமை நடக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.