News April 2, 2024
கடைசி இரண்டு ஓவரில் மரண அடி

RCB-க்கு எதிரான போட்டியில் லக்னோ அணி ஆரம்பம் முதலே அடித்து ஆடி வந்தது. ஒரு கட்டத்தில் விக்கெட்டுகள் விழுந்ததும் ரன் சரியத் தொடங்கியது. ஆனால், கடைசியில் களமிறங்கிய பூரண், கடைசி 2 ஓவர்களில் 5 சிக்ஸர்கள் பறக்கவிட்டார். இதில் ஒரு சிக்ஸர் 106 மீ தூரம் சென்றது. இன்று அடித்த 5 சிக்ஸர்களுடன் சேர்த்து IPL தொடரில் 103 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இவரது அதிரடியால் LSG 181/5 ரன்கள் எடுத்துள்ளது.
Similar News
News January 2, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 2, மார்கழி 18 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1.30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: சதுர்தசி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்
News January 2, 2026
கடமையே முக்கியம்.. புத்தாண்டு பணியில் நல் உள்ளங்கள்

2026 புத்தாண்டு பிறப்பை நாமெல்லாம் உற்சாகத்துடன் கொண்டாடிய வேளையில், குறிப்பிட்ட சில துறையை சேர்ந்தவர்கள் அயராது உழைத்துள்ளனர். மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போக்குவரத்து ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள், போலீஸ், தீயணைப்பு துறையினர் அர்ப்பணிப்புடன் பணியாற்றி பாதுகாப்பான புத்தாண்டு கொண்டாட்டத்தை உறுதி செய்துள்ளனர். நமக்காக பணியாற்றிய இந்த நல் உள்ளங்களை லைக் போட்டு வாழ்த்துங்க!
News January 2, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜன.2) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.


