News October 21, 2024
மனிதனும் நாயகனும் மோதிக் கொண்ட நாள்!

மணிரத்னம் இயக்கத்தில், கமல் நடிப்பில் உருவான ‘நாயகன்’ திரைப்படம் வெளியாகி 37 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அதே நாளில், ரஜினியின் ‘மனிதன்’ திரைப்படமும் வெளியானது. இரு படங்களும் வெற்றி பெற்றிருந்தாலும் ஃபாக்ஸ் ஆஃபிஸில் ‘மனிதன்’ அதிகமாக வசூலித்தது. ஆனால், தலைமுறைகள் கடந்தும் ‘நாயகன்’ இன்றும் கொண்டாடப்படுகிறது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News July 6, 2025
ஒரு டெஸ்டில் 2 சதம்… லெஜெண்டுகள் வரிசையில் கில்!

இந்திய அணிக்கு டெஸ்ட் கேப்டனாக ஒரு மேட்சின் இரு இன்னிங்ஸிலும் சதம் அடித்த 3-வது வீரர் என்ற பெருமையை கில் பெற்றுள்ளார். ENG-க்கு எதிரான 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 269 ரன்களும், 2-வது இன்னிங்ஸில் 161 ரன்களையும் அவர் குவித்தார். இதற்கு முன்னதாக, 1978-ல் கொல்கத்தாவில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக கவாஸ்கர் 107, 182 ரன்களையும், 2014-ல் அடிலெய்டில் ஆஸி-க்கு எதிராக 115, 141 ரன்களும் குவித்திருந்தார்.
News July 6, 2025
ஒரு வாரத்தில் சவரனுக்கு ₹1,000 உயர்ந்த தங்கம்

தங்கம் விலை ஒரு வாரத்தில் சவரனுக்கு ₹1,000 அதிகரித்துள்ளது. கடந்த 29-ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) 22 கேரட் 1 கிராம், ₹8,985-க்கும், சவரன் ₹71,440-க்கும் விற்பனையான நிலையில், இன்று(ஜூலை 6) 1 கிராம் ₹9,060-க்கும், ₹72,480-க்கும் விற்பனையாகிறது. வரும் நாள்களில் சுபமுகூர்த்தம் காரணமாக நகை விற்பனை அதிகரித்தால் விலை மேலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
News July 6, 2025
வாய் திறக்காத திமுக: பிரேமலதா தாக்கு

அஜித் மரணத்திற்கு நீதி கேட்டு தேமுதிக சார்பில் போராட்டம் நடந்தது. இதில் பேசிய பிரேமலதா, திமுக ஆட்சியில் இதுவரை 24 கொலைகள் நடந்துள்ளது. சாத்தான்குளத்துல நடக்கும் போது வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சீங்களே, இன்னைக்கு எங்க போனீங்க என்று கேள்வி எழுப்பினார். மேலும், அஜித் மரணம் குறித்து திமுகவினர் வாயே திறக்கவில்லை, கூட்டணி தலைவர்களும் அஜித் போட்டோவிற்கு பூ போட்டுவிட்டு போய்விட்டார்கள் என சாடினார்.