News May 12, 2024
வண்ணப் பட்டுடுத்திய வான மகள்

சூரியப் புயல் பூமியைத் தாக்கும்போது காந்தவிசையின் காரணமாக அவை வட மற்றும் தென் துருவங்களை நோக்கி பாயும். முடிவில், அந்த இரண்டு துருவங்களிலும் வண்ணமயமான காட்சிகள் தோன்றும். அப்படியான ஒரு அதிசய நிகழ்வுதான் மூன்று நாள்களாக நிகழ்ந்து வருகிறது. 10ஆம் தேதி ஐரோப்பிய நாடுகளில் தெரிந்த இந்த ஆரோரா என்னும் வண்ண வானம், நேற்று இரவு நியூசிலாந்து நாட்டில் தென்பட்டது.
Similar News
News August 5, 2025
விதைப்பதை தான் அறுக்க முடியும்: விளாசிய அஷ்வின்

4-வது டெஸ்டில் ரிஷப் பண்ட் காயமடைந்து வெளியேற நேர்ந்தது. அந்த சூழ்நிலையில் சப்ஸ்டிடியூட் களமிறங்க வேண்டுமென காம்பீர் உள்பட பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனால், ‘அது ஒரு ஜோக்’ என பென் ஸ்டோக்ஸ் கிண்டலடித்தார். இந்நிலையில், நேற்று பண்ட்டின் நிலை கிறிஸ் வோக்ஸுக்கு ஏற்பட்டது. இதுபற்றி அஷ்வின், ‘நாம் என்ன விதைக்கிறோமோ அதையே அறுக்க முடியும். ஸ்டோக்ஸ் பேசும்முன் சிந்திக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
News August 5, 2025
விரைவில் ‘ஏஜெண்ட் டீனா’: லோகேஷ்

‘விக்ரம்’ படத்தில் கமல் கதாபாத்திரம் மட்டுமில்லாமல் பல கதாபாத்திரங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அப்படி பாராட்டப்பட்ட கதாபாத்திரங்களில் ஒன்று தான் ‘ஏஜெண்ட் டீனா’. தற்போது இந்த கதாபாத்திரத்தை மையமாக வைத்து வெப்தொடர் ஒன்றை உருவாக்க திட்டமிட்டு, அதற்கான பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இத்தொடரை வேறு ஒருவர் இயக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
News August 5, 2025
விஜய் UPSET.. தவெகவில் குழப்பம்

புஸ்ஸி ஆனந்த் மீது விஜய் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் கொடுத்த பூத் கமிட்டி லிஸ்ட்டில் 25,000 போலியானவை என தெரியவந்ததே இதற்கு காரணமாம். மாவட்டச் செயலாளர்கள் கொடுத்ததைத்தான் தங்களிடம் கொடுத்ததாக விஜய்யிடம் அவர் சமாளித்திருக்கிறார். மேலும், மாவட்டச் செயலாளர்களிடமும் ஏன் இப்படி செய்தீர்கள் என புஸ்ஸி ஆதங்கப்பட்டாராம். இது தவெகவில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.