News March 15, 2025
மகன்களை கொன்ற கொடூரத் தந்தை… அதிர்ச்சிப் பின்னணி!

அப்பாதான் எல்லோருக்கும் முதல் ஹீரோ. ஆனால், ஆந்திராவில் 2 சிறுவர்களுக்கு அப்பாவே வில்லனாகியுள்ளார். காக்கிநாடா மாவட்டத்தைச் சேர்ந்த ONGC ஊழியரான சந்திர கிஷோர், சரியாக படிக்கவில்லை எனக்கூறி தனது 2 மகன்களை வாளி நீரில் அமுக்கி கொலை செய்துள்ளார். இதனையடுத்து, அவரும் தற்கொலை செய்துள்ளார். 3 பேரின் உடல்களை கைப்பற்றி போலீஸ் விசாரித்து வருகிறது. கொடூர தந்தையின் செயல் பற்றி உங்கள் கருத்து என்ன?
Similar News
News March 16, 2025
இதென்ன சோதனை… டயரின்றி தரையிறங்கிய விமானம்!

பாகிஸ்தானில் விமான பயணத்தின்போது பயணிகளுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. லாகூர் விமான நிலையத்தில் சரியான முறையில் தரையிறங்கிய விமானத்தின் பின்பக்க சக்கரங்களில் ஒன்று மாயமாகி இருந்ததுதான் அந்த அதிர்ச்சிக்கு காரணம். நடுவானில் சக்கரம் கழன்று விழுந்ததா? அல்லது புறப்படும்போதே சக்கரம் இல்லாமல் இருந்ததா? என விமான நிறுவன அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 16, 2025
WPL கோப்பையை வென்றது மும்பை

பரபரப்பான இறுதிப்போட்டியில் மும்பை அணி WPL பட்டம் வென்றது. டெல்லி அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 3 ஆண்டு லீக் வரலாற்றில் 2வது முறையாக கோப்பையை தட்டிச் சென்றது. மும்பை நிர்ணயித்த 150 ரன்கள் இலக்கை விரட்டிய டெல்லி அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. நிகி பிரசாத் (25*) போராடியும் பலன் கிடைக்கவில்லை. ஏற்கெனவே, 2023ல் மும்பை கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
News March 16, 2025
கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட கர்நாடக டிஜிபி

துபாயில் இருந்து தங்கம் கடத்தியதாக கைதான நடிகை ரன்யா ராவின் வளர்ப்புத் தந்தையான கர்நாடக டிஜிபி (போலீஸ் வீட்டுவசதி கட்டுமானத் துறை) ராமசந்திர ராவ் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். தங்கக் கடத்தலுக்கு ராமசந்திர ராவுக்கு இருக்கும் செல்வாக்கை நடிகை ரன்யா ராவ் பயன்படுத்தி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பான வழக்கில், ராமசந்திர ராவுக்கு எதிராக விசாரணை நடத்த கோர்ட் உத்தரவிட்டிருந்தது.