News March 29, 2024
ராகுலுக்கு சம்மன் அனுப்பிய நீதிமன்றம்

பாஜக மீது 40% கமிஷன் குற்றச்சாட்டை முன்வைத்த காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தியை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக சட்டமன்றத் தேர்தலின்போது, ‘40% கமிஷன் அரசு’ என காங்., விளம்பரம் செய்ததை எதிர்த்து பாஜக மான நஷ்ட வழக்கு தொடுத்தது. ஜூன் 1இல் நடக்கவுள்ள இவ்வழக்கு விசாரணை தொடர்பாக ராகுலுக்கு கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.
Similar News
News December 3, 2025
நடிகை சமந்தாவின் கல்யாண வைபோக கிளிக்ஸ்

ராஜ் நிடிமொரு – சமந்தா திருமணத்தின் போது எடுக்கப்பட்ட சில புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதை ஸ்டைலிஸ்ட் பல்லவி சிங், ‘தெய்வீகப் பெண்மை முழுமையாக மலர்ந்தது’ என்ற கேப்ஷனுடன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். புகைப்படங்களில் மணக்கோலத்தில் முழு நிலவாய் சமந்தா ஜொலிக்கிறார். கணவர் ராஜ் நிடிமொருவை போதுமான அளவு தவிர்த்துவிட்டு மணப்பெண்ணின் வெட்கத்தை போட்டோகிராஃபர் பதிவு செய்துள்ளார்.
News December 3, 2025
செங்கோட்டையனின் அடுத்த சம்பவம்

விஜய் கட்சியில் KAS இணைந்த பிறகு, கோபியில் தனது அலுவலகம் முன்பு வைத்த போஸ்டரில் புஸ்ஸி ஆனந்த் போட்டோ இடம் பெறாதது கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், கார்த்திகை தீப வாழ்த்து போஸ்டரில் புஸ்ஸி ஆனந்த் போட்டோவை இடம்பெற செய்து, KAS குழப்பத்தை நீக்கியுள்ளார். அத்துடன், அண்ணா, MGR, ஜெ., போட்டோக்களுடன், தவெகவின் கொள்கை தலைவர்களின் போட்டோக்களும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
News December 3, 2025
இதுபோன்ற விசித்திரமான இடங்கள் தெரியுமா?

இந்தியாவில் சில இடங்கள், சில நேரங்களில் அசாதாரணமாக தோன்றுகின்றன. பெரும்பாலும், மக்கள் வாழும் விதம், பழமையான பழக்கவழக்கங்கள், இயற்கை அதிசயங்கள், விசித்திரமான நிகழ்வுகள் ஆகியவை இதற்கு காரணங்களாக உள்ளன. இதுபோன்ற இடங்களுக்கு நீங்கள் சென்றதுண்டா? மேலே உங்களுக்காக சில விசித்திரமான இடங்களை பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


