News April 7, 2025
சீமானுக்கு கெடு விதித்த கோர்ட்!

நாதக தலைவர் சீமான் மாலை 5 மணிக்குள் நேரில் ஆஜராக திருச்சி குற்றவியல் கோர்ட் கெடு விதித்துள்ளது. தன்னையும், தனது குடும்பத்தினரையும் அவதூறாக பேசியதாக திருச்சி டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கில் சீமான் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இன்று காலை வழக்கு விசாரணையின்போது சீமான் ஆஜராகவில்லை. இதனால் மாலை 5 மணிக்குள் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி எச்சரித்துள்ளார்.
Similar News
News April 11, 2025
‘கவுரவ்’ கிளைட் பாம்: இந்திய ராணுவத்துக்கு புதிய வரவு

நீண்ட தூரம் சென்று தாக்கும் கிளைடு வெடிகுண்டு ‘கௌரவ்’-ஐ இந்திய ராணுவம் வெற்றிகரமாக சோதித்துள்ளது. கடந்த ஏப்.8 – 10ஆம் தேதிகளில் நடத்தப்பட்ட சோதனையில், போர் விமானத்தில் இருந்து வீசப்பட்ட வெடிகுண்டு, 100 கி.மீ தொலைவில் இருந்த இலக்குகளை துல்லியமாக தாக்கியுள்ளது. 1000 கிலோ எடை கொண்ட இந்த கௌரவ் வெடிகுண்டு, முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.
News April 11, 2025
10ம் வகுப்பு தமிழ் விடைத்தாள்: தமிழாசிரியரே திருத்த உத்தரவு

10ம் வகுப்புத் தேர்வு தமிழ் விடைத்தாளை தமிழ் வழியில் போதிக்கும் ஆசிரியர் மட்டுமே திருத்த வேண்டுமென்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், அரசு தேர்வுகள் இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், தமிழ் விடைத்தாளை தமிழாசிரியரும், ஆங்கில விடைத்தாளை ஆங்கிலத்தில் போதிக்கும் ஆசிரியருமே திருத்தும் விதியை பின்பற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.
News April 11, 2025
வீடுகள் விலை 9% உயர்வு.. சென்னையில் எவ்வளவு?

2024-25 நிதியாண்டில் முக்கிய நகரங்களில் வீடுகள் விலை சராசரியாக 9% உயர்ந்திருப்பதாக புராப்இக்விடி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கொல்கத்தாவில் 29%, தானேயில் 17%, பெங்களூரில் 15%, புனேயில் 10%, டெல்லி, ஹைதராபாத்தில் 5% விலை உயர்ந்துள்ளதாக கூறியுள்ளது. சென்னையில் 4% உயர்ந்துள்ளது. உங்களுக்கு சொந்த வீடு வாங்கும் திட்டம் உள்ளதா? உங்கள் ஏரியாவில் விலை எப்படி?