News October 25, 2024
மஸ்கிற்கு கொட்டு வைத்த கோர்ட்..!

USA அதிபர் தேர்தலில் டிரம்பை ஆதரிக்கும் நபர்களுக்கு தினமும் $1 மில்லியன் வழங்க எலான் மஸ்க்கிற்கு அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சட்டத்தை மீறி வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதாகக் கடும் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. பேச்சுரிமை, ஆயுதம் வைத்து கொள்ளும் உரிமை என்ற தனது மனுவில் கையெழுத்திடும் நபர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து, தேர்தல் நடைபெறும் வரை பரிசு வழங்குவதாக மஸ்க் அறிவித்து இருந்தார்.
Similar News
News November 11, 2025
தோட்டா தரணிக்கு செவாலியே விருது அறிவிப்பு

கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருதை, நவ.13-ம் தேதி சென்னையில் உள்ள பிரான்ஸ் கலாசார மையத்தில் அவர் பெறவுள்ளார். 2 தேசிய விருதுகள், பத்ம ஸ்ரீ, தமிழ்நாடு அரசின் விருது உள்ளிட்டவற்றை வென்ற அவரது கலைப் பயணத்தில் செவாலியே விருது மேலும் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது. தோட்டா தரணிக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
News November 11, 2025
குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஈஸி டிப்ஸ்!

தற்போது மழைக்காலம் என்பதால் குழந்தைகளுக்கு அடிக்கடி உடம்பு சரி இல்லாமல் போகலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஈஸியான வழி இருக்கிறது. ஒரு பல் பூண்டை பாலில் சேர்த்து வேகவைத்து மசித்து, அதனுடன் மிளகு, தேன், சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து கொடுங்கள். 1 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு இதை கொடுக்கலாம் என சித்தா டாக்டர்கள் சொல்கின்றனர். குழந்தைகளை நோயிலிருந்து காக்கும் இத்தகவலை SHARE பண்ணுங்க.
News November 11, 2025
மனிதர்களுக்கு இருக்கும் சூப்பர் பவர் பற்றி தெரியுமா?

சில மனிதர்கள் அசாதாரணமான செயல்களை அசால்ட்டாக செய்வார்கள். கிட்டத்தட்ட சூப்பர் பவர் போல சாத்தியமற்ற செயல்களை செய்து அசத்துவார்கள். என்னென்ன சூப்பர் பவர் கொண்ட மனிதர்கள் உள்ளனர் என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் உங்களை வியப்படைய செய்த சூப்பர் பவர் எது? கமெண்ட்ல சொல்லுங்க.


