News February 12, 2025

நாட்டின் பணவீக்கம் குறைந்தது

image

ஜனவரி மாதத்திற்கான சில்லரை பணவீக்கம் 4.31 சதவீதமாகக் குறைந்துள்ளது. டிசம்பர் மாதம் இது 5.22 சதவீதமாக இருந்தது. உணவுப் பொருட்களின் விலை குறைந்ததால், ஜனவரி மாதத்திற்கான சில்லரை பணவீக்கம், ஐந்து மாதங்களில் இல்லாத அளவு குறைந்துள்ளது. கொரோனாவுக்குப் பின் 8 சதவீதம் வரை உயர்ந்த சில்லரை பணவீக்கம், 4.31 சதவீதமாக குறைந்திருப்பது மக்களுக்கு நற்செய்தியாகப் பார்க்கப்படுகிறது.

Similar News

News February 12, 2025

தை பௌர்ணமி எப்படி வழிபடலாம்?

image

தை மாத பௌர்ணமி, பூச நட்சத்திரத்தில் தோன்றுவதால் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த தினத்தில் முருக பக்தர்கள் காவடி எடுத்து பாத யாத்திரை செய்வார்கள். ஒவ்வொரு பௌர்ணமியுமே சிவனுக்கு சிறப்புதான் என்றாலும் தை பௌர்ணமி தினமான இன்று, திருவண்ணாமலை, சதுரகிரி, வெள்ளியங்கிரி ஆகிய மலைகளில் பக்தர்கள் கிரிவலம் அல்லது மலையேற்றம் செய்து வழிபடுவார்கள். சிலர் வீட்டிலேயே விரதம் இருந்து விளக்கேற்றுவார்கள்.

News February 12, 2025

கொந்தளிக்கும் ஆப்பிள் ஐஃபோன் யூசர்ஸ்

image

ஆப்பிளின் லேட்டஸ்ட் வெளியீடான ஐஃபோன் 16 குறித்து பயனாளர்கள் கடும் அதிருப்தி தெரிவிக்கின்றனர். ஃபோன் யூஸ் பண்ணாதபோதே பேட்டரி குறைவதால், நாளொன்றுக்கு 2 முறை சார்ஜ் போட வேண்டிய தேவை இருக்கிறதாம். ஐஃபோன் 16 அதிக சூடாகிறது. ஐஃபோன் 15க்கும் இதற்கும் பெரிய வேறுபாடு ஏதும் இல்லாமல் விலை மட்டும் ஏற்றப்பட்டுள்ளது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது.

News February 12, 2025

பெரிதாகும் போட்டோ.. அதிமுகவில் காட்சி மாற்றம்

image

அதிமுக கூட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக செங்கோட்டையனின் புகைப்படம் பெரிய அளவில் வைக்கப்பட்டுள்ளது. கோபி செட்டிப்பாளையத்தில் தற்போது நடைபெற்று வரும் MGR பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் இப்படி பேனர் வைக்கப்பட்டுள்ளது. EPSக்கு எதிராக செங்கோட்டையன் குரல் கொடுத்ததில் இருந்து அதிமுகவில் பல காட்சிகள் மாறி வருகின்றன. இதுகுறித்து உங்களது கருத்து என்ன?

error: Content is protected !!